வளரும் நாடுகளில் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும்: ஐ.நா தகவல்!
ஆசிய-பசிபிக் பிரதேசங்களில் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2014ம் ஆண்டில் மந்தமாகவே இருக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ﹒நாவின் ஆசிய-பசிபிக் சமூகப் பொருளாதாரக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளால் வரும் 2014ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பிரதேச வளரும் நாடுகளின் பொருளாதாரம் மந்தமாக மீட்சி பெறும். மேலும் இந்நாடுகளில் உறுதியற்ற பொருளாதாரக் கொள்கை, வர்த்தகப் பாதுகாப்பு முதலியவை ஆசிய-பசிபிக் பிரதேசப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பரந்த உள்நாடு சந்தைகளை உடைய இந்தியா சீனா போன்ற நாடுகளில் கூட பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைந்து காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Category: உலக செய்தி

0 comments