பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு வழங்க திட்டம்!
சென்னை, டிச. 17:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த ஆண்டைவிட கூடுதல் செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகளுக்கு இலவச பொங்கல் பை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி 10 கிராம், திராட்சை 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் என சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் அனைத்து பொருட்கள் அடங்கிய �பொங்கல் பை�� இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இலவச பொங்கல் பை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2013ம் ஆண்டு, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது என்றுகூறி, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.160 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ரூ.20 மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, ரூ.40 மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்கான இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம் ஆகியவை அந்தந்த நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு ரூ.300 கோடி தமிழக அரசு செலவு செய்தது.
தற்போது வருகிற 2014ம் ஜனவரி மாதம் வருகிற பொஙகல் பண்டிகைக்கும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வருகிற மே மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு போல் அல்லாமல் கூடுதல் மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அரிசி பெறும் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் என்று மட்டும் கணக்கில் எடுக்காமல், வெள்ளை கார்டு மற்றும் �என்� கார்டு என சுமார் 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு இது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு வழங்கியதுபோன்று ரூ.160 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில், ரூ.25 மதிப்பிலான 1 கிலோ பச்சரிசியும், ரூ.100 மதிப்பிலான இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்கான இதர பொருட்கள் வாங்க ரூ.200 ரொக்கப்பணம் அல்லது அதற்கு கூடுதலான தொகை கூட வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி கூறும்போது, �கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் எதிர்பார்த்த பருவமழை இல்லாததால் தமிழகத்தின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு வசதியாக கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல், அரிசி, பச்சரிசி, ரொக்கத்தொகை என அனைத்தும் சேர்த்து குறைந்த பட்சம் ரூ.300ல் இருந்து ரூ.500 வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வாய்ப்புள்ளது� என்றார்.
கடந்த ஆண்டைவிட கூடுதலாக கிடைக்கும்
Category: மாநில செய்தி


0 comments