.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பள்ளிகளில் கணினி உண்டு.... மின்சாரம் இல்லை...

Unknown | 9:52 PM | 0 comments

நாட்டின் பெரும்பான்மையான துவக்கப் பள்ளிகளில், கம்ப்யூட்டர்கள் உள்ளன; ஆனால் கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டரை இயக்க மின்சாரம் இல்லை என கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
துவக்கப் பள்ளிகளுக்கு எளிதில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால், அந்த கம்ப்யூட்டர்களை இயக்க அந்தப் பள்ளிகளுக்கு, மின்சாரம் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள துவக்கப் பள்ளிகளில் 4.80 சதவீதம் பள்ளிகளில் தான் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பள்ளிகளில் 28.13 சதவீத பள்ளிகளில், மின்சார வசதி கிடையாது என்பது அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த முதல்வர், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் மாநிலம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் தருண் கோகாய் தலைமையிலான அசாம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா மாநிலத்தில், 80 சதவீத பள்ளிகளுக்கு மின் இணைப்பு கிடையாது.
ஆனால் அந்தப் பள்ளிகளில், 74 சதவீத பள்ளிகளுக்கு, கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் சித்தராமைய்யா தலைமையிலான, கர்நாடக மாநில அரசில் 81 சதவீத துவக்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், 96 சதவீத கம்ப்யூட்டர்கள் பள்ளிகளில் மின் இணைப்பு இல்லாததால், முடங்கிக் கிடக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1