பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ள ஜெயலலிதாவிற்கு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய பொதுமக்கள் நன்றி!
பெரம்பலூர், டிச.19-
தமிழக முதல்-அமைச்சர் வேப்பந் தட்டையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,¢ மங்களமேட்டில் காவல் துணைக் கோட்ட அலுவல ருக்கு குடியிருப்புடன் இணைந்த அலுவலகம், வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் உள்ளிட்ட நலத்திட்டங்களை அறிவித் துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய பொதுமக்கள் கலெக் டர் தரேஸ் அஹமதுவை சந்தித்து முதல்-அமைச் சருக்குநன்றிகளை தெரிவித்து கடிதத்தை வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தொழில் நுட்ப துறையில் மின் ஆளுமை திட்டத்திற்கு முதலிடத்திற்கான விருதி னையும், மாற்றுத் திறனாளி களுக்கு அதிகப்படியான நலத் திட்டங்களை வழங்கிய தற்கான முதலிடத்திற்கான விருதினையும்¢ மாவட்டத்திற்கு வழங்கி முதல்-அமைச்சர் பெருமைபடுத்தி யிருக்கிறார்.
மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்¢கான சிறந்த கலெக்டருக் கான விருதினையும், சுற்றுச் சூழல் பராமரிப் பிற்கான பசுமை விருது 2013க்கான 3-வது இடத்திற்குரிய விருதினையும் வழங்கி யுள்ளார்.
இத்தகைய விருதுகளை பெற்றுள்ளதற்காக மாவட்ட கலெக்டரைப் பாராட்டியும் வாழ்த்துகளை தெரிவித் தனர்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.பி. மருதைராஜா, வேப்பந் தட்டை ஊராட்சி ஒன் றியக் குழு துணைத் தவைலர் வேலுச்சாமி, விவசாய சங்கத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments