வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் -முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்த 312 திட்டங்களில் வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் இடம் பெற்றுள்ளது.
சென்னை, டிச.14 - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடைபெற்ற, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நிறைவடைந்தது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நலத் திட்டங்கள், சாலைகள்_குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் காவல்துறையினர் நலன் தொடர்பான 312 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அவை வருமாறு:_
முதலமைச்சர் அறிவித்த 312 திட்டங்களில் நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய திட்டம் மட்டும் மட்டும் இங்கு கொடுத்துள்ளோம்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டில்
துணை கோட்ட அதிகாரிக்கு குடியிருப்புடன் இணைந்த அலுவலகம்
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர்
காவல்நிலையத்திற்கு புதிய கட்டடம்.
திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டு பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உருவாக்கப்படும்
பெரம்பலூர் மாவட்டம் கைப்பாடி சாலையில்,
மருதையார் ஆற்றின் குறுக்கே 4_8 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் அமைக்கப்படும்.
திருச்சி _ நாமக்கல் சாலை,
துறையூர் _ பெரம்பலூர் சாலை,
முசிறி _ துறையூர் _ ஆத்தூர் சாலை ஆகியவை மேம்படுத்தப்படும் _
பெரம்பலூர் மாவட்டம் மேல்நந்தியாறு,
மருதையாறு துணை வடி நிலத்தில் 14 குளங்கள் மற்றும் 2 அணைக்கட்டுகள் நவீனமயமாக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
ஆனால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரிதும் எதிர் பார்த்த மருத்துவ கல்லுரி இதில் இடம் பெறவில்லை.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டின் நிறைவுநாளில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
Category: வி.களத்தூர்

0 comments