தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் உயர்கல்வித்துறை முடிவு!
சென்னை
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரைகாமராஜர் பல்கலைக்கழகம், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம் வேறு வேறு உள்ளன.
இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் பிரச்சினை எழுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அனைத்து படிப்புகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து துணைவேந்தர்களின் கருத்துக்களை ஏற்று பின்னர் பாடத்திட்டம் தயாரிக்க கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
Category: கல்வி, மாநில செய்தி


0 comments