.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!

Unknown | 8:12 PM | 0 comments



உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில், இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி 
நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது: R&D முதலீட்டைப் பொறுத்தவரை, சீனா 385 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 228 நிறுவனங்களும், அமெரிக்காவின் விரிகுடா பகுதியில் 220 நிறுவனங்களும் உள்ளன.R&D துறையில் அதிக நிதி ஆதாரத்தை வைத்துள்ள நிறுவனங்கள், இந்தியாவை அத்துறைக்கான முதலீட்டிற்கு சிறந்த இடமாக கருதுகின்றன. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில், R&D துறையில் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய R&D துறை செலவினத்தில், 40% அளவிற்கு, வடஅமெரிக்காவில் தமது தலைமையகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 34% அளவிற்கு ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 18% ஜப்பானில் இயங்கும் நிறுவனங்களையும், 7% ஆசிய-பசிபிக் நாடுகளை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1