ரிப்பீட்டு 2013 -க்ரைம் செய்திகள்!
ஜன. 2
டெல்லியை தொடர்ந்து புதுவை பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஆபத்தான நிலையில் மீட்பு. இச்சம்பவம் புதுவை பகுதி மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
ஜன. 3
* ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. கடல் வழியாக சென்னைக்குள் நுழைய முயன்ற 17 பேர் சிக்கினர்.
* 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் ராஜேஷ் குமாருக்கு தூக்குத்தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.
* வீட்டில் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ததால் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கினார் அசாமின் போடோ பிராந்திய கவுன்சில் காங்கிரஸ் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் பிக்ராம் சிங் பிரம்மா
ஜன. 22
லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்த குற்றத்துக்காக அரியானா முதல்வராக 5 முறை பதவி வகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 10 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.
ஜன. 23
பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், கும்பலாக சேர்ந்து பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரை செய்தது.
ஏப். 3
பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் அமலானது.
ஏப். 7
மேற்கு வங்கத்தில் ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 29 ராணுவ வீரர்களை கொன்ற வழக்கில் தப்பிய மாவோயிஸ்ட் தீவிரவாதி சாம் சரண் டூடு கோவையில் கைது.
ஏப். 8
புனேயில் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை திருடி அதை கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்று 9 பேரை கொன்ற சந்தோஷ் மானேவுக்கு மரண தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு.
ஏப். 12
இளைஞர் காங்கிரஸ் தலைவரை கொலை செய்யும் முயற்சியில், 9 காவலர்களை கொன்ற காலிஸ்தான் தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் புல்லரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்தது
ஏப். 18
ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாதி மிர்சா ஹிமாயத் பெய்க்குக்கு, புனே விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு
ஏப். 19
அமெரிக்காவின் பாஸ்டனில் குண்டு வைத்த செசன்ய தீவிரவாதி தாமர்லான் சார்னியோவ் சுட்டுக்கொலை
ஏப். 20
5 வயது சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த காம கொடூரன் மனோஜ் குமார் கைது. சிறுமி பலாத்கார சம்பவத்தை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, டெல்லி ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களை அடக்க, 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்தனர்
மே. 1
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நடந்த வன்முறையில்
5 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 200 வாகனங்கள் உடைக்கப்பட்டன.
3 ஆயிரம் பேர் கைது
மே. 2
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு கோமா நிலையில்
சிகிச்சை பெற்று வந்த இந்திய கைதி சரப்ஜித் சிங் மரணம்
மே. 9
ஜம்மு சிறையில் சக கைதிகளால்
தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா மரணம்.
மே. 23
மலேசியாவில் பெண் தொழிலதிபர் உள்பட 4 பேரை கொன்று, உடல்களை எரித்த வக்கீல் உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
பிப். 3
பாலியல் பலாத்கார குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் அமலா னது.
ச் அமெரிக்காவில் 26 மருந்துகடைகள் நடத்தி வந்தி இந்தியர் பாபுபாய் என்பவருக்கு மருந்து ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மிக்சிகன் நீதிமன்றம் தீர்ப்பு.
பிப். 4
அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.
பிப். 5
மலேசியாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ரபிதின் சதிர் என்ற நபருக்கு 115 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர மலேசிய நீதி மன்றம் உத்தரவு.
பிப். 6
மத்திய பிரதேசத்தில் அரசு கிளர்க்காக வே லை செய்த அர்ஜுன் தாஸ் லால்வாணி என்பவரிடம் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன.
பிப். 9
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின்
முக்கிய குற்றவாளியான முகமது அப்சல் குரு, திகார் சிறை யில் ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டான்.
பிப். 10
திருச்சி துறையூரில் நகைக்கடையில் புகுந்து ரூ.2கோடி தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளை.
பிப். 12
இந்திய ராணுவத்துக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர்களை விற்பதற்காக இந்தியர்கள் சிலருக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனத்தின் தலைவர் ஜியூசெப்பே ஆர்சி மிலன் நகரில் கைது.
ச் காதலிக்க மறுத்ததால் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட காரைக்கால் பெண் இன்ஜினியர் வினோதினி 90 நாள் சிகிச்சை பலனின்றி மரணம்.
பிப். 13
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத்தை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
பிப். 19
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்து வைத்து, கொடூரமாக சுட்டுக் கொன்ற புகைப்படங்களை இங்கிலாந்து நாட்டின் சேனல்&4 செய்தி நிறுவனம் வெளியிட்டது.
பிப். 24
காதலனால் ஆசிட் வீச்சுக்குள்ளான சென்னை பெண் வித்யா, 25 நாள் சிகிச்சை பலனின்றி பலி.
ஜுன் 24
மைனர் பெண்ணு டன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது, பதவி யை பயன்படுத்தி அதை மறைக்கப் பார்த்தது ஆகிய குற்றத்துக்காக, இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மிலன் நகர நீதிமன்றம் தீர்ப்பு.
ஜூலை 7
பீகார் மாநிலம் புத்தகயாவில் புத்த மதத்தினரின் புனித தலமான மகாபோதி கோயிலில் அதிகாலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 80 அடி உயர புத்தர் சிலை மற்றும் பஸ் நிலையம் அருகிலுமாக மொத்தம்
9 குண்டுகள் வெடித்தன. இதில் புத்த துறவிகள் 2 பேர் காயமடைந்தனர்.
மார்ச் 9
ஜெர்மனி நாட்டு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் தலைமறைவான ஒடிசா போலீஸ் டி.ஜி.பி மகன் பிட்டி மொகந்தி 6 ஆண்டுகளுக்குப்பின் பேஸ்புக் இணையதளத்தால் போலீசில் சிக்கினான்.
மார்ச் 11
டெல்லி மாணவி பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை.
மார்ச் 14
இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற விவகாரத் தில் இந்தியாவைவிட்டு வெளியேற
இத்தாலி நாட்டு தூதர் டேனியல் மஞ்சினிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மார்ச் 21
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் சிறையாக குறைக்கப்பட்டது.
ச் பிரபல நடிகர்
சஞ்சய்தத்தின் 6 ஆண்டு சிறையை 5 ஆண்டாக குறைத்தது.
டிச. 3
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 2 மாதமாக தேடப்பட்டு வந்த அசராம்பாபு மகன் நாராயண் சாயை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டிச. 5
பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகள்
சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் இளம் பெண் வக்கீலை
நீதிபதி கங்குலி பாலியல் தொல்லை செய்துள்ளார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு அறிவித்தது
டிச. 13
பணிப்பெண்ணுக்கு குறைவான சம்பளம் தந்ததாகவும், விசா மோசடி செய்ததாகவும் இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயான¤ கோப்ர£கடேவை அமெரிக்க போலீசார், நடுத்தெருவில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.
ஆக. 17
மும்பை தாக்குதல் உள்பட நாடு முழுவதும் 40 குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட லஷ்கர்&இ&தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா கைது
ஆக. 20
காதலிக்க மறுத்த பெண் வினோதினி மீது ஆசிட் வீசிய வழக்கில் வாலிபர் அப்பு என்கிற சுரேஷ்க்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு
ஆக. 23
மும்பையில் பாழடைந்த மில்லில் போட்டோ எடுக்க சென்ற பெண் நிருபரை 5 பேர் கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்தது. அவருடன் சென்ற ஆண் நண்பர் தாக்கப்பட்டார்.
ஆக. 29
புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் யாசின் பட்கல் இந்திய & நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான்.
செப். 13
டெல்லி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. ‘இவர்கள் செய்துள்ள குற்றம் அபூர்வத்திலும் அபூர்வமானது; சகிக்க முடியாதது’ என்று கூறிய நீதிபதி, ‘எல்லாருக்கும் மரணம்’ என்று தனது தீர்ப்பில் அறிவித்தார்.
செப். 20
மும்பையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி அப்சல் உஸ்மானி மர்மமான முறையில் மாயமானான்.
அக். 4
நாடு முழுவதும் தேடப்பட்டு வந்த பயங்கர தீவிரவாதி போலீஸ் பக்ருதீன்
சென்னையில் கைது செய்யப்பட்டான்.
நவ. 3
அமெரிக்காவின் ‘ட்ரோன்’ என்ற ஆளி ல்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவன் ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டான்
நவ 26
நொய்டா மாணவி ஆருஷி கொலை
வழக்கில், அவரது பெற்றோர்களான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார்
ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
நவ 30
பெண் நிருபரை மானபங்கம் செய்த விவகாரத்தில் தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார்.
முக்கிய கொலைகள்
ஜனவரி
* 7 திருவள்ளூர் ஏகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(55). அதிமுக பிரமுகர். நிலத்தகராறு காரணமாக, தேவேந்திரன் என்பவரால் கொலை செய்யப் பட்டார்.
* 30 வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். ஐடிஐ மாணவர். காதல் விவகாரத்தில் நண்பர்களால்,தலை தனியாக, உடல் தனியாகவெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
* 31 சென்னை குன்றத்தூர் ஒன்றியம் சேத்துப்பட்டு ஊராட்சித் தலைவர் சங்கர்(55). மணிமங்கலம் அருகே காரில் சென்றபோது, மர்ம கும்பலால் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி கொல்லப்பட்டார்.
* 31 மதுரை திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு(50) காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பிப்ரவரி
* 5 திருவில்லிபுத்தூர் படிகாசுவைத்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (17). பள்ளி மாணவி, மர்ம நபரால் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.
*11 புதுக்கோட்டையை சேர்ந்த வக்கீல் கண்ணன்(32) 4 பேர் கும்பலால் நடுரோட்டில் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
*14 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர், படைவென்றான் அம்பலம், சாலையில் 6 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
*25 தண்டையார்பேட்டையை சேர்ந்த தேதிமுக பிரமுகர் நெடுஞ்செழியன், 6 பேர் கொண்ட கும்பலால் வீட்டருகே நடந்து சென்றபோது, கொல்லப்பட்டார்.
மார்ச்
* 13 சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பிரகாஷ், வெட்டிக் கொல்லப்பட்டார்.
* 16 வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ.2 கோடி கேட்டு, பிளஸ்1 மாணவன் மணிஷ், கடத்தி கொல்லப்பட்டார்.
*20 சேத்துப்பட்டு அதிமுக செயலாளர் பாபு கட்சி அலுவலகத்தில், மர்ம நபரால் கொல்லப்பட்டார்.
* 21 சங்கரராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி கதிரவன் ஓட, ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டார்.
* சென்னை குன்றத்தூர் அதிமுக கிளை செயலாளர் சுரேஷ், மர்ம நபரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார்.
ஏப்ரல்
* 5 சேலத்தில் நள்ளிரவில் வாலிபர் கண்களை தோண்டி எடுத்தும், வெறி அடங்காத குடிமகன்கள் வாலிபரின் உடலை எரித்தனர்.
* 9 சென்னை மறைமலை நகரில் ஜாமீனில் வெளி வந்த ஒரு மாதத்தில் பிரபல ரவுடி பிரேம் ராஜா(30) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
* 16 சிறையில் இருந்து வெளியேறிய பிரபல ரவுடி இமானுவேல்(23) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
* 20 கொலை வழக்கில் ஜாமீனில் வந்த ரவிச்சந்திரன்(42), ராஜேந்திரன்(38)இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டனர். ராஜேந்திரன், காவல் நிலைய வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மே
* 19 சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ரவுடி பரோலில் வெளிவந்தபோது, சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஜுன்
*29 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி ஏடூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோதாண்டன், அதிமுக கிளைச் செயலாளர் மதுவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்.
ஜுலை
*1 இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வெட்டி கொலை.
*19 சேலத்தில் பாஜ மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் வெட்டி கொலை.
*30 செம்பியத்தில் நள்ளிரவில் தி.மு.க வட்டச்செயளாலர் இளங்கோவன்(44) ஆட்டோவில் வந்த மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர்
* 1 மதுரவாயலில் கொள்ளையர்களால், வீட்டில் தனியாக இருந்த தாய், மகள், விமலாதேவி(தாய்), பவித்ரா(மகள்) கழுத்து அறுத்து கொல்லப்பட்டனர்.
* 1 தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் நம்பிராஜன். நெல்லை சட்டக்கல்லூரி மாணவர். நெல்லையில் வைத்து நடுரோட்டில் கொல்லப்பட்டார்.
* 14 சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர், சுப்பையா அபிராமபுரத்தில் வைத்து, கூலிப்படைகளால் நடுரோட்டில் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டார்.
அக்டோபர்
*10 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ்(50) மாணவர்களால் கல்லூரி வளாகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
* 8 திண்டிவனத்தை சேர்ந்த கால்டாக்ஸி டிரைவர் குமார், காதல் தகராறில் சென்னை குன்றத்தூர் நெடுஞ்சாலையில், காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
* 17 வேளச்சேரியை சேர்ந்த வங்கி மேலாளர் நாகராஜ், கொள்ளையர்களால் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டார்.
* 19 சேலத்தை சேர்ந்த அரசு அதிகாரி ராமகிருஷ்ணன், அவரது மகன் ராஜசேகர், கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.
நவம்பர்
* 5 உடுமலை அருகே பிளஸ் 2 மாணவி புஷ்பலட்சுமி(18) மர்ம நபர்களால் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
*5 நெல்லை மூலக்கரைப்பட்டியை சேர்ந்த சிறுவன் இசக்கிதாஸ்(13) பாழடைந்த மண்டபத்தில் தலை தனியாக கை தனியாக துண்டித்து கொலை.
* 6 சென்னை அமைந்தகரையை சேர்ந்த அதிமுக மகளிரணி பிரமுகர் கஸ்தூரி(50) மர்ம நபரால் படுகொலை.
* 7 பசுபதி பாண்டியன் கூட்டாளி புறா மாடசாமி(35) மற்றும் பேச்சிமுத்து(30) ஆகிய 2 பேர் வெட்டிக் கொலை.
* 13 சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி நிர்வாகி மணிகண்டன்(27) படுகொலை.
* 16 சேலம் ஆத்தூர் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் செல்வம்(43), தம்பி ஜெயசீலன்(40) ஆகியோர் 10 பேர் கொண்ட கும்பலால் கொடூர கொலை.
* 29 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர், அருள் மற்றும் அவரது மனைவி நான்சி ராணி ஆகியோர் வீட்டில் வைத்து, நகைக்காக கொள்ளையர்களால் கொல்லப்பட்டனர்.
டிசம்பர்
* 6 தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த தலைமை ஆசிரியை ஞானதீபம் பரிமளவள்ளி (61) கழுத்து அறுத்து கொல்லப்பட்டார்.
* 14 நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஆலப்பட்டியை சேர்ந்த வைத்திலிங்கம், பூராஜா, செல்வராஜ் ஆகிய மூவரும் 20 பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டனர்.
* 15 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி (தந்தை, மகள்) குத்தி கொலை செய்யப்பட்டனர்.
* 20 சென்னை, பொன்னேரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை காந்திமதி(38) நடத்தை சந்தேகத்தால் கணவரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
Category: மாநில செய்தி
0 comments