தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 19,600 வழக்குகள் தேக்கம்!
தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருவது ஒருபுறம் இருக்க, போலீசில், 5,100 வழக்குகளும், கோர்ட்டில், 14,560 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நாடு முழுவதும், பெண் களுக்கு எதிரான வன்முறைகள், தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சட்டத்திருத்தம் மூலம் கடும் தண்டனைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிகம்:இருந்தபோதும், நாடு முழுவதும், கற்பழிப்பு, கடத்தல், மானபங்கம், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து வருகின்றன. இதில், தமிழகம் மட்டும் விதிவிலக்கல்ல. தமிழகத்திலும், இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், கடந்த ஆண்டு அக்., வரை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 5,590 புகார்கள் பெறப்பட்டன. இது, இந்த ஆண்டு, 5,865 புகார்களாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, கற்பழிப்பு, கணவன் மற்றும் உறவினரால் கொடுமைப்படுத்தப்படுதல், வரதட்சணை, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்கள் அதிகம்.நடப்பு ஆண்டின், அக்., வரை, 778 கற்பழிப்பு புகார்கள்; கணவன் மற்றும் அவரது உறவினரால் துன்பப்படுத்தப்படுதல் தொடர்பாக, 2,130; வரதட்சணை மரணம் தொடர்பாக, 97; பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, 265 புகார்கள் பதிவாகிஉள்ளன.

வழக்குகள் தேக்கம்:
புகார்கள் ஒருபுறம் பதிவாகி வந்தாலும், குறிப்பிட்ட
பிரபலமான ஒரு சில வழக்குகள் தவிர,புகார்கள் ஒருபுறம் பதிவாகி வந்தாலும், குறிப்பிட்ட
பெரும்பான்மைவழக்குகள், போலீஸ் விசாரணையிலும், கோர்ட்
விசாரணையிலும் தேங்கிக்
கிடக்கின்றன. இந்த வகையில்,
அக்., 31 நிலவரப்படி, தமிழகத்தில்,
கடந்த, 10 ஆண்டுகளாக, காவல்
நிலையங்களில், விசாரணை
அடிப்படையில், 5,100 வழக்கு கள்
தேங்கியுள்ளன. இதில், 600 கற்பழிப்பு;
1,431 கடத்தல்; 827 மானபங்கம்
தொடர்பான வழக்குகள் அடக்கம்.அக்டோபர் மாத துவக்கத்தில், 5,721 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதில், 621 வழக்குகளை, வேறு துறைக்கு மாற்றியது, இறுதி அறிக்கை அளித்தது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என, வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
நீதிமன்றங்களில், 10 ஆண்டு களாக தேங்கியுள்ள, 14,560 வழக்குகளில், 2,483 கற்பழிப்பு; 3,387 மானபங்கம்; 1,434 கடத்தல் வழக்குகள் அடங்கும்.அக்., மாத துவக்கத்தில், 14,893 வழக்குகள் நிலுவையில் இருந்தன. மாத இறுதியில் அது, 14,560 என, குறைந்துள்ளது.முதலிடத்தில் நெல்லை:கற்பழிப்பு, மானபங்கம், வரதட்சணை மரணம் உள்ளிட்ட, எட்டு இனங்களில், மொத்தம், 676 புகார்களுடன் நெல்லை மாவட்டம், முதலிடத்திலும், அடுத்த இடங்களை, சென்னை - 470; மதுரை - 431; விழுப்புரம் - 405, என, பிடித்துள்ளன.கற்பழிப்பு
Category: மாநில செய்தி



0 comments