செல்போன் மூலம் ஆங்கிலம் கற்கும் திட்டம்: சென்னையில் இங்கிலாந்து தூதரகம் அறிமுகம்!
சென்னை, நவ.19- செல்போன் மூலம் ஆங்கிலம் கற்கும் திட்டத்தை சென்னையில் இங்கிலாந்து தூதரகம் நேற்று அறிமுகப்படுத்தியது.
ஆங்கில மொழியை உலகம் முழுவதும் கற்றுக்கொடுக்க இங்கிலாந்து தூதரகம் முடிவு செய்து அதற்கான செயலை நடத்தி வருகிறது. இந்தியாவில் இணையதள வசதி கொண்ட செல்போனில் ஆங்கிலம் கற்க வசதியான திட்டத்தை நேற்று சென்னையில் தொடங்கியது. இதற்காக அப்ளைடு மொபைல் லேப் மற்றும் ஏஏஎஜூடெக் ஆகிய 2 நிறுவனங்களோடு இங்கிலாந்து தூதரகம் கூட்டு சேர்ந்து உள்ளது.
உலகில் இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நாடாகும். இந்தியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களுக்கு எது முக்கிய தேவை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவே ஆங்கிலத்தை பெரும்பகுதி மக்களிடம் கொண்டு செல்வதற்கான உதவிகளை செய்த இரு முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு வைத்து உள்ளோம்.
இங்கிலீஷ் ஆன் மொபைல் என்ற மென்பொருளை ஏற்கனவே 3 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எங்கிருந்தாலும் தொலைபேசியில் இருந்தும் ஒரு வார்த்தையை சொல்வது அல்லது எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலம் உரையாடல் ஆங்கிலத்தை கற்க முடியும்.
ஆரம்ப நிலை, இடைநிலை, முன்னேறிய நிலை ஆகிய 3 நிலைகளில் இந்த மென்பொருள் கிடைக்கும். எது தேவையோ அதை வாங்கி மொபைல் போனில் பயன்படுத்தலாம். ஆனால் இணையதள வசதி இருக்க வேண்டும். காலப்போக்கில் விரைவில் இணையதள வசதி இல்லாத செல்போனிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தை படித்து முடிப்போருக்கான தகுதியை இங்கிலாந்து தூதரகம் ஆராய்கிறது. ஆங்கிலத்தை கற்கவும் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்களிடம் உரையாடவும் செய்யலாம். அதற்கான மதிப்பீட்டை வழங்கவும் அந்த மென்பொருள் உதவுகிறது. முன்னேறிய நிலையில் ஆங்கிலம் படித்தால் அவர்களுக்கு இங்கிலாந்து தூதரகம் சான்றிதழ் வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்ளைடு மொபைல் லேப்ஸ் நிறுவனர் மிரிகங்க் திரிபாதி கூறியதாவது:-
இங்கிலாந்து தூதரகத்தோடு கூட்டு சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சான்றிதழ் படிப்பை ஏராளமான மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இந்தியாவில் சாதாரண மக்கள் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் இங்கிலாந்து தூதரகத்தின் சான்றிதழ் பெற்ற ஆங்கில மொழிப்பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.
இங்கிலீஸ் ஸ்ட்ரோக் என்ற பொருள் ஆங்கிலத்தையும் கிரிக்கெட் விளையாட்டையும் கற்றுக் கொள்ள உதவும். அதோடு ஆங்கிலத்தில் மற்றவர்களோடு தெளிவாக பேசவும் உதவுகிறது.
இவ்வாறு திரிபாதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
Category: மாநில செய்தி


0 comments