.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி : மாவட்ட சுகாதார அதிகாரிகள் "அசால்ட்'!

Unknown | 8:46 PM | 0 comments

பெரம்பலூர்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த சம்பவம், உடும்பியம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சிமே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள உடும்பியம் கிராமத்தைச் சேர்ந்தர் செல்லபாண்டியன்-சரஸ்வதி தம்பதி மகள் சவுந்தர்யா, 9, இவர் சேலம் மாவட்டம், வீரகனூர் சரஸ்வதி நர்ஸரி அன்ட் பிரைமரி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கு கடந்த, ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.இதற்கு கிருஷ்ணாபுரம் அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. சவுந்தர்யாவுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் மாலை காய்ச்சல் அதிகமானதைத் தொடர்ந்து, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சவுந்தர்யா சேர்க்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தூக்கத்தில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை: பூலாம்பாடி, கடம்பூர், அரும்பாவூர், உடும்பியம், தொண்டமாந்துறை பகுதிகளில் டெங்கு காய்ச்சலால், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தும் அங்கு டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்காமல், பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை கும்பக்கர்ண தூக்கத்தில் உள்ளதாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி, நவ., 2ம் தேதி காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிட்டப்பட்டது.
அதன்பின்னும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நவ., 4ம் தேதி பூலாம்பாடி கிராமத்தைச் அன்பழகன் மனைவி ஜெயந்தி, 42, என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், டெங்கு பாதிக்கப்பட்ட கிராமங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தியதுடன், சுண்ணாம்பு அதிகளவில் கலந்த பிளிச்சிங் பவுடர் தெளித்தார்களே தவிர, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான உருப்படியான நடவடிக்கையும் எதையும் எடுக்கவில்லை.
டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு, காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் ஊசி மருந்து, மாத்திரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என, யாரும் இதுபோன்ற நோய் தாக்குதல் சமயங்களில் கூட, சம்பந்தப்பட்ட கிராமங்களில் தங்கி வேலைபார்ப்பதில்லை. பலர் வீட்டிலிருந்தவாரே அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஃபோனில் தொடர்பு கொண்டு, காய்ச்சல் பாதித்தவர்களின் பெயர் பட்டியலை வாங்கி, அலுவலகத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் வேகமாக பரவிய டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்ததே சிறுமி மற்றும் பெண் என, இதுவரை, இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் மொஃபைலை எடுக்கவில்லை. இனியாவது ஒப்புக்கு விழிப்புணர்வு பணிகளை செய்யாமல், உண்மையான அக்கறையுடன் பணிகளை செய்தால், மேலும் உயிர்ப்பலிகளை தடுக்க முடியும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1