.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சர்க்கரை நோயும் - நபிவழி மருத்துவமும்.

Unknown | 8:22 PM | 0 comments

சர்க்கரை நோயும் - நபிவழி மருத்துவமும். "நாம் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80) மேற்கண்டபடி நோய்க்கான நிவாரணத்தை தானே தருவதாக அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான். இதேபோல நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எல்லா நோய்களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள். கடந்த 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் வளர்ச்சி கண்டு வரும் யுனானி மருத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. o எவருடைய வாழ்க்கை முறை சுன்னத்தான (நபி வழி) அடிப்படையில் அமைந்திருக்கிறதோ அவர்களுக்கு யுனானி மருத்துவம் அற்புதமான முறையில் பலனளிக்கும் என்பது திண்ணம். o கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்திலிருந்தும், நேரம் தவறி உண்ணும் பழக்கத்திலிருந்தும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது இஸ்லாம். o ஒருவர் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற நிலையில் உணவுப்பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும். நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. o நன்றாகப் பசித்த பின்னர் தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. o ஒருவருக்கு விருப்பமான உணவாக இருந்தாலும் அதை மூச்சுமுட்ட உண்பதை தவிர்க்கச் சொல்கிறது இஸ்லாம். o ஒரு முஸ்லிமின் சுன்னத்தான உணவுப் பழக்கம் என்பது, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட பின்னர் சுமார் அரை மணி நேரம் வரை நீரருந்தக் கூடாது. o உணவின் சுவைக்காக மசாலாப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் தக்காளி, புளி, தேங்காய், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை உணவுப்பொருட்களில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். o உணவை நன்றாக மென்று அரைத்து அதன்பின் உட்கொள்ள வேண்டும். இது உணவை விரைந்து செரிமாணமாக்கும். தரையில் அமர்ந்து உண்பது சிறப்பானதாகும். o ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டியது அவசியம். o நீரிழிவு நோயாளி மதிய உணவுக்குப் பின் உடனடியாக ஒரு மணி நேரமாவது தூங்குவது அவசியமாகும். o ஆலிவ் (ஒலிவம்) Olive Oil எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை பாதுகாக்க முடியும். o ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்ப்பதும், பாதாம் எண்ணெயின் சில துளிகளை பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். o நீரிழிவு நோயாளி உணவில் வினிகரை (காடி) சேர்த்துக் கொள்வது நல்லது. ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவுக்கு வினிகரை வழக்கமான சமையல் மற்றும் மசாலா பொருட்களோடு சேர்த்துக் கொண்டால் அற்புதமான முறையில் ஜீரணக் குறைபாடுகள் நீங்கும். o ஒரு நீரிழிவு நோயாளி தேவையற்ற வகையில் உடலை வருத்திக் கொள்வதையோ மனஉளைச்சல் அடைவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும். o இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் (நன்மை தீமைகள்) அனைத்தும் இறைவன் விதித்தபடியே நடக்கிறது என்பதை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். o நீரிழிவு நோயாளிகள் சுத்தமான தேன், மாதுளை, கருப்பு திராட்சை, பேரீட்சை, அத்திக்காய், ஆலிவ் காய் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்த பலனைத்தரும். o நீரிழிவு நோயாளி ஒருவர் மேற்கண்டபடி நபிவழியிலான இயற்கை உணவுகளுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால் நிச்சயமாக நீரிழிவு நோயின் காரணமாக உண்டாகும் கிட்னி, இருதயம், நுரையீரல், மூளை, கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம். o நீரிழிவு நோய் என்பதை மருத்துவத்துறை "மெட்டா போலிக் டிஸ்ஆர்டர்" என்று அழைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான இன்சூலின் சுரக்காமல் போவது அல்லது இன்சூலினை சுரக்கச் செய்யும் செல்கள் செயல்படாமல் போவதாகும். o இதன் விளைவால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். o அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகளவு தாகம், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். o நீரிழிவு நோய் என்பது இன்றைய நிலையில் மனிதர்களை மெல்ல மெல்லக் கொல்லும் மிகப்பெரும் ஆபத்துகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மருத்துவ உலகம் இது குறித்து எச்சரிக்கை செய்கின்றது. எனவே நீரிழிவு நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ள மேற்சொன்ன நபிவழியில் அமைந்த உணவு முறையை கட்டுப்பாட்டோடு கடைபிடித்தால் சந்தோஷமாக, ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன், ஷிஃபா யுனானி ஹர்பல் கிளினிக்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1