.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

திடீர் கோளாறினால் - நெடுஞ்சாலையில் இறங்கி ஓடிய விமானம்: அமெரிக்காவில் பரபரப்பு!

Unknown | 9:39 PM | 0 comments

நியூ யார்க், நவ. 25- 

சிறியரக வாடகை விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் இதர வாகன வரிசைகளுடன் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார் வாடகை விமான நிறுவனத்திடம் இருந்து சிறியரக 'செஸ்னா' விமானத்தை வாடகைக்கு எடுத்தார். 

வாட்டர் வில்லியில் இருந்து போர்ட்லேண்ட் நோக்கி அவர் பறந்துக் கொண்டிருந்த போது விமான எண்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் எண்ஜினின் இயக்கம் முற்றிலுமாக நின்றுவிட்டது. 

அவ்வேலையில் விமானம் கம்பர்லேண்ட் நெடுஞ்சாலைக்கு மேலே வானத்தில் பறந்துக் கொண்டிருந்தது. உடனடியாக தரையிறங்கா விட்டால் விமானம் கீழே விழுந்து, சுக்கு நூறாக நொறுங்கி தீப்பிடித்து வெடித்து விடும் என்பதை உணர்ந்த சச்சின், வாகன போக்குவரத்து மிகுந்த போர்ட்லேண்ட் நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கினார். 

விமானம் சாலையில் இறங்குவதை கண்ட இதர வாகன ஓட்டிகள் திகைத்துக் போய் தங்களது வாகனங்களை ஓரம்கட்டி விட்டு விமானம் செல்ல வழி விட்டனர். 

'ஜேம்ஸ் பாண்ட்' படங்களில் வருவதை போல் எண்ஜினின் இயக்கம் இழந்த அந்த விமானம் சில கிலோமீட்டர் தூரம் வரை ஓடி சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி நின்றது. 

'நல்லவேளையாக, எந்த வாகனத்தின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தாது தனக்கு பிரமிப்பாக உள்ளது' என்று கூறுகிறார், சச்சின்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1