.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இலவச இலவச சைக்கிள், லேப்டாப் வழங்குவதில் தாமதம்!

Unknown | 8:22 PM | 0 comments


திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் கருத்து கேட்பு கூட்டம், ஆணையத்தின் தலைவர் பிஷப் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அப்போது, சிறுபான்மையினர் பள்ளிகளின் நிர்வாகிகள் பேசியதாவது: அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் இலவச சைக்கிள், லேப்டாப் போன்றவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. பல பள்ளிகளுக்கு
இதுவரை வழங்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு சத்துணவு மையங்களை அனுமதிக்காமல் தாமதப்படுத்துகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 8ம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1