.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை!

Unknown | 7:46 PM | 0 comments

டெல்லி: சேது சமுத்திர திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கோரியுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு இந்த கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது. சேது திட்டத்தை செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் மன்னார்வளைகுடாவின் சுற்று சூழலுக்-கும் இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் இந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாபம் கருதி சுற்றுச்சூழலை கெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. பச்சோரிக் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியப்படி சேது சமுத்திர திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. 

மேலும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே நிர்ணயித்த பாதையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1