பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை!
பெரம்பலூர், நவ.19-
பெரம்பலூர் மாவட்டத் தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை ஏற்கனவே தவறி விட்ட நிலையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரம்பலூர் கடந்த 16-ந்தேதி அதிகாலை முதல் இரவு வரை பரவலான மழை பெய்தது. கார்த்திகை தீபத்தன்று மிதமான வெயிலு டன் தட்ப வெப்பநிலை இதமாக இருந்தது.
பெரம்பலூரில் நேற்று மதியம் 12.30 மணி முதல் மாலை வரை மீண்டும் பரவ லான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை பதிவான மழை அளவு விபரம்:-
பெரம்பலூர்- 71.5 மி.மீ., வெண்பாவூர்-80 மி.மீ., தழு தாழை-70 மி.மீ., பாடாலூர்-9 மி.மீ., செட்டிக்குளம்-84 மி.மீ. மொத்தம்: 377.50 மி.மீ. சராசரி மழை அளவு- 75.5 மி.மீ.
சராசரிக்கும் குறைவு
தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தாலும் பெரம் பலூர் மாவட்டத்தில் சரா சரிக்கு குறைவாக மழை பதிவாகி உள்ளது. ஏரி, குளம், குட்டை போன்ற நீர்¢நிலைக ளில் மழைநீர் மிகச்சிறிய அளவே தேங்கி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பச்சைமலைத்தொடரில் உற்பத்தியாகும் காட்டாறுகள் கோனேரி ஆறு, சுவேத நதி, கல்லாறு, சின்னாறு, வெள் ளாறு, மருதையாறு ஆகியவற் றில் மிகக்குறைவான அளவே மழைநீர் தேங்கி உள்ளது.
Category: மாவட்ட செய்தி


0 comments