.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் தமிழக முதல்-அமைச்சருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை!

Unknown | 8:15 PM | 0 comments

சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி முஸ்லிம் களுக்கு இட ஒதுக் கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று தமிழக முதல்-அமைச் சருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சொத்து பாதுகாப்பு குழு மாநில தலைவர் பி.எஸ்.அம்சா தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:-
10 சதவீத இட ஒதுக்கீடு
நமது நாட்டில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வு நிலை குறித்து நீதிபதி சச்சார் ஆய்வு செய்து நமது நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் முஸ்லிம் மக்கள் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று தனது ஆய்வு அறிக்கையில் தெளி வாக குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல் இந் திய நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வு நிலை குறித்து ஆய்வு செய்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களை விட மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது அவசியமானது என்று தெரி வித்துள்ளது.
ரங்கநாத்மிஸ்ரா அறிக்கையை கருத்தில் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் இட ஒதுக் கீடு கோரிக்கையின் அடிப் படையிலும், சென்ற முறை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி யின் போது இஸ்லாமிய சமு தாய மக்களின் மேம்பாட்டுக் காக 3½ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ‘நான் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சமுதாய மக் களுக்கு 3½ சதவீதம் உள்ள இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தி தருவேன்’ என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சராகிய நீங்கள் உறுதிமொழி தந்தீர் கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் இட ஒதுக் கீட்டை அதிகப்படுத்தி தராமலிருப்பது இஸ்லாமிய மக்களுக்கு அதிருப்தியும் மிகுந்த ஏமாற்றத்தையும் அளிப்பதாக உள்ளது.
எனவே தாங்கள் (முதல்- அமைச்சர் ஜெயலலிதா) கடந்த தேர்தலின் போது, ‘நான் ஆட்சிக்கு வந்தால் இஸ் லாமிய சமுதாய மக்களுக்கு இருந்து வரும் 3½ சதவீத இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன்’ என்று உறுதி யளித்ததை நிறைவேற்றி தரும் வகையில் இட ஒதுக்கீட்டை கால தாமதமின்றி வழங்கு மாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் பி.எஸ்.அம்சா தெரி வித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1