.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஈரானுடனான வர்த்தகத் தொடர்புகள் அதிகரிக்க வாய்ப்பு: இந்திய அரசு தகவல்!

Unknown | 9:22 PM | 0 comments

புது டெல்லி; நவம்பர் 28 ;  

கடந்த வாரம் ஈரானின் அணுசக்திப் பயன்பாடு குறித்து உலக நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்காவும், ஐ.நாவும் அறிவித்துள்ளன.

பொருளாதாரத் தடைகள் இருந்தபோதே இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் அனுப்புவதில் ஈரான் முன்னிலை இடத்தில் இருந்துவந்தது.தற்போது தடைகள் தளர்த்தப்படுகின்ற நிலையில் இந்தியா தன்னுடைய தேவைகளுக்கான எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முயற்சிக்கும் என்று கூறப்படுகின்றது.  

சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்று அந்நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய பணபாக்கிக்காக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. ஈரான் அந்தக் கப்பலை விடுவிக்க இந்தியாவை வலியுறுத்திவந்த போதும் நீதிமன்ற உத்தரவினால் இது நடைபெறவில்லை.

ஈரானிலிருந்து பெறும் எண்ணெய்க்கு இந்தியா ரூபாய்மதிப்பில் அந்நாட்டிற்கு பணம் செலுத்திவருகின்றது. இந்திய வங்கியில் இருக்கும் இந்தப் பணத்தினை எடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தின் பாக்கியை செலுத்தும்படி ஈரான் சமீபகாலங்களில் கூறிவந்தது. 

இந்தக் கப்பல் ஐ.நாவால் தடை செய்யப்பட்ட ஈரானின் புரட்சி இயக்கத்தின் பாதுகாப்பில் வருவதால் இந்தியா அதில் தயக்கம் காட்டிவந்தது.ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் இந்தப் பிரச்சினைக்கும் முடிவு ஏற்படுத்தும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கின்றது.  

மேலும், ஈரானின் சபஹார் துறைமுகத்தை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சிறந்த மாற்றாக அமையும்வகையில் சீரமைப்பதற்கு உதவ இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது. ஈரான் இதற்குத் தயாராக இருந்தபோதும் இதில் செய்யப்படும் இந்திய முதலீட்டில் குறிப்பிட்ட சதவிகிதம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்ற விதிமுறையின்மூலம் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தப் பணியினை ஒத்தி வைத்திருந்தார். 

தற்போது இதற்கு இணக்கமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதால் இந்தத் திட்டமும் எந்தவிதத் தடங்கலுமின்றி நிறைவேற்றப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து வரும் ஆறு மாதத்தில் எண்ணெய் வர்த்தகம், துறைமுக சீரமைப்பு போன்ற பணிகளில் ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1