.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு தடை? சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் தீர்ப்பால் பரபரப்பு!

Unknown | 8:44 PM | 0 comments

இந்தியாவில் பெரும்பாலானோர் ஆபாச இணையதளங்களை பார்ப்பதால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றது என்றும் உடனடியாக தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் இதில் தலையிட்டு, இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடைசெய்யும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிபதி B.S. Chauhan நேற்று ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பு ஒன்றில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்களை பார்த்துதான் பெரும்பாலான இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை செக்ஸில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்று பல வழக்குகளில் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே தொலைத்தொடர்புத்துறையினர் இதில் தனிக்கவனம் செலுத்தி, உடனடியாக இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடைசெய்யும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று உத்தரவிடுவதாக அவர் மேலும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் வாழும் மக்கள் ஆபாச இணையதளங்களை பார்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டுவதாக ஒரு சர்வே கூறுகிறது. மேற்கு வங்காளம், குஜராத், டில்லி, மேகாலாயா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ளவர்க்ள் உலகின் டாப் 100 ஆபாச இணையதளங்களை அடிக்கடி பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மாநிலங்களில் பாலியல் வன்முறை வழக்குகளும் அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே அவர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் கருத்து ஆமோதித்து இந்திய அரசு உடனடியாக இதில் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1