.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மற்றும் ஏரி, குளங்களை ஆழப்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்-தமமுக வலியுறுத்தல்!

Unknown | 2:28 AM | 0 comments



பெரம்பலூர், நவ. 23:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குளம், குட்டை, ஏரிகளை ஆழப்படுத்தி நீராதாரத்தைப் பெருக்கவேண்டும் என தமமுக வலியுறுத்தி உள்ளது. பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அரசியல் விழிப் புணர்வு இளைஞர்கள் மாவட்ட மாநாடு நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. பெரம்பலூர் மேற்கு வானொலித்திடலில் நடந்த மாநாட்டிற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலை இலக்கிய அணிச்செயலாளர் சக்திகுருபாண்டியன் வரவேற்றார். இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சித்தலைவர் ஜான்பாண்டியன், அவரது துணைவி பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கட்சியின் மாநில நிர்வாகிகள் அய்யாதுரை, சந்திரன், நல்லுசாமி, முத்துராக்கு, தவ மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சரையும், காங்கிரஸ் அரசையும் வன்மையாகக் கண்டிப்பது, பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி நிறுவ அரசைக் கோருவது, தாழ்த் தப் பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18சதவீதத்திலிருந்து 21சதவீதமாக மாற்றியமைத்திட மத்திய அரசைக் கேட்டுக் கொள் கிறது. தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் சுட்டுத்தள்ளி, சிறைபிடித்து கொடுமை செய்யும் இலங்கை அரசை கண்டிப்பது, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குளம், குட்டை, ஏரி ஆகியவற்றை ஆழப்படுத்தி நீராதாரத்தைப் பெருக்கிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் ராமர் நன்றி தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1