இந்தியர்களைக் காப்பாற்றிய சவூதி அதிகாரிகளுக்கு இந்தியத் தூதர் நன்றி!
ரியாத்: கடலில் தத்தளித்த ஆறு இந்தியர்களை சவூதி அராம்கோ நிறுவன அதிகாரிகள் காப்பாற்றிக் கரை சேர்த்து உதவியதற்காக
சவூதிக்கான இந்தியத் தூதர் ஹமீத் அலீ ராவ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சவூதியின் கிழக்கு மாகாண துறைமுக நகரான ஜூபைலில் ஆறு இந்தியர்கள் (ஹூசைன் சாலிஹ் முஹம்மது, முபீன் சுலைமான், நூர் முஹம்மது காசிம், அய்யூப் ஜோன் னாஸ், ஹாரூன் ரஷீத், மற்றும் உத்மான் அய்யூப்) கடல் பிரயாணம் செய்த போது, அவர்களின் படகு தீப்பிடித்துக் கவிழத் தொடங்கியுள்ளது. இதை அறிந்த அராம்கோ பாதுகாப்பு அணி வீரர்கள் சிறிய ரக உலங்கு விமானம் ஒன்றின் மூலமாகச் சென்று அவ்ர்களை மீட்டு உபசரித்துள்ளனர்.
பின்னர் அந்த ஆறு பேரையும் நலம் விசாரித்த இந்தியத் தன்னார்வ சமூக சேவகர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் அவர்கள் தாயகம் மீள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்தியர்கள் அறுவரையும் விபத்திலிருந்து காப்பாற்றிய சவூதி அதிகாரிகளுக்கும், அவர்களை நலம் விசாரித்த சக இந்திய தன்னார்வத் தொண்டர்களுக்கும் இந்தியத் தூதர் ஹமீத் அலீ ராவ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Category: வளைகுட செய்தி

0 comments