.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

போக்குவரத்துக் காவல்துறையில் புழங்கும் இலஞ்சம் ரூ. 22,000 கோ....டி!

Unknown | 8:54 PM | 0 comments

புது டெல்லி: சாலைப் போக்குவரத்தைச் சரி செய்யும் பணியிலுள்ள போக்குவரத்துக் காவல்துறையைச் சரிக்கட்டும் வகையில்
ஓராண்டுக்கு அளிக்கப்படும் இலஞ்சத் தொகை ரூ. 22,000 கோ.....டி என்று அண்மைத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

லூதியானா, கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், அஹமதாபாத், இந்தூர், விஜயவாடா ஆகிய நகரங்களில் ஊடகப் படிப்புக்கான மையம் என்ற அமைப்பு ட்ரக் எனப்படும் கனவுந்து ஓட்டுநர்கள் 1,200 பேரிடம் ஆய்வு நடத்தி இதனை அறிந்துள்ளது.

ஆவணங்களற்ற நிலையில் இலஞ்சமாகவும், தகுதிச் சான்றிதழ் பெறவும், உரிமம் பெறவும் இத்தொகை போக்குவரத்துக் காவலர்களால் மேலதிகமாக, கையூட்டாகப் பெறப்படுவதாகச ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்த இலஞ்சப் பணத்தின் 45 சதவிகிதப் பங்கு காவலர்களுக்கும், 43 சதம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், மீதமுள்ள 12 சதம் மற்றவர்களுக்கும் அளிக்கப்படுவதாக அவ்வாய்வு மேலும் கூறுகிறது.

இவ்வாறாக, கன ரக வாகன ஓட்டிகளிடமிருந்து போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர் பெறும் இலஞ்சத் தொகை மட்டும் ஆண்டுக்கு ரூ. 22,000 கோடி என்று தெரிய வந்துள்ளது. இந்த ஓட்டுநர்களில் 77  விழுக்காட்டினர் ' இந்த காவல்துறை தொல்லை தாங்க முடிவதில்லை' என்றும் அலுத்துக் கொண்டுள்ளனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1