பெரம்பலூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 65 ஆயிரம் குடும்பங்களுக்கு 16 ஆயிரம் டன் இலவச அரிசி வினியோகம்
பெரம்பலூர், நவ.16-
பெரம்பலூர் மாவட்டத் தில், நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 339 குடும்ப அட்டை தாரர்களுக்கு 15 ஆயிரத்து 876 டன் இலவச அரிசி வினியோகம் செய்யப் பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தெரிவித்தார்.
பேட்டி
பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வட்டியில்லா பயிர்க்கடன்
பெரம்பலூர் மண்டலத்தில் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 31.10.2013 வரை 11 ஆயிரத்து 822 விவசாயிகளுக்கு ரூ.5381.83 லட்சம் வட்டி யில்லா பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் 26 ஆயிரத்து 649 பேருக்கு 7612.37 லட்சம் நகைக்கடன்கள் வழங்¢கப்பட்டள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.07 லட்சம் கடன் உதவி வழங¢கப் பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தி லுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள 81 சுயஉதவிக் குழுக் களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் கடனாக வழங்கப் பட்டுள்ளது.
மிகவும் நலிவடைந்த விவ சாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி மற்றவர்க ளோடு சமமாக வாழ உதவிடும் வகையில் கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவ சாயிகளுக்கு மத்திய காலகட னாக ரூ.2 கோடியே 83 லட்சம் வழங்கப் பட்டுள்ளது.
16 ஆயிரம் டன் இலவச அரிசி
பெரம்பலூர் மண்டலத்தில் 189 முழுநேர அங்காடிகள் மற்றும் 85 பகுதிநேர அங்¢காடிகள் மூலம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 339 குடும்ப அட்டைதாரர்களுக்கு நடப்பு நிதியாண்டில் 15 ஆயிரத்து 876 டன் அரிசி விநியோகிக் கப்பட்டுள்ளது. மேலும் துவரம் பருப்பு 763 டன்னும், உளுத்தம் பருப்பு 350 டன்னும், பாமாயில் 987 டன்னும் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலையின் 4 நியாய விலை கடைகள் மூலம் 31.10.2013 வரை 37 ஆயிரத்து 950 கிலோ தரமான அரிசி கொள்முதல் செய்யப்பட்டு அதில் 35 ஆயிரத்து 502 கிலோ அரிசி, 1 கிலோ 20 ரூபாய்க்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட துணைப்பதிவாளர் சின்னத் தம்பி, சார்பதிவாளர் சத்திய நாராயணன், இணைப் பதிவாளர் அலுவலக கண் காணிப்பாளர்கள் சிவக்குமார், சின்னவளை ஆகியோர் உடன் இருந்தனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments