ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற மெக்காவில் கூடிய முஸ்லீம் யாத்ரிகர்கள்!!
மெக்கா; அக்டோபர் 13 ;
இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லீம் பெருமக்கள் தங்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற நேற்று மெக்காவில் கூடினர்.அங்கு கட்டுமானப்பணிகள் நடைபெறுவதாலும், மெர்ஸ் வைரஸ் நோய்த்தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினாலும் இந்த முறை பயணிகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டனர்.
சென்ற வருடம் இதே நேரத்தில் பரவிய மெர்ஸ் வைரசினால் உலகம் முழுவதும் 60 பேர் இறந்தனர். இதில் 51 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு இதுவரை இந்த நோய்த்தாக்கத்தின் அறிகுறிகள் எங்கும் காணப்படவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா அலி ராபியா தெரிவித்தார்.
மெக்காவிற்கு வந்த யாத்ரிகர்கள் அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ, ரயில் மார்க்கமாகவோ மினாவை அடைந்தனர்.அங்கு இரண்டு மில்லியன் மக்களும் தங்கக்கூடிய வகையில் தீப்பிடிக்காத 45,000 கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இங்கு தங்கி தங்களது தொழுகையை முடிக்கும் மக்கள் இறுதி நிகழ்ச்சிக்காக அராபத் மலைக்குச் செல்வார்கள்.
மாலை வரை நடைபெற்ற இந்த தொழுகை நிகழ்ச்சியுடன் இந்த வருடத்திற்கான யாத்திரை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார ரயில்தடமானது 4,00,000 மக்கள் பிரயாணிக்கக்கூடிய வசதி கொண்டது. மக்களின் பாதுகாப்பிற்காக 1,00,000 இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்...
எந்தவிதமான போராட்டங்களையும், வன்முறைகளையும் அரசு ஆதரிக்காது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க இந்த நாடு வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் 1,4 மில்லியன் மக்களின் பாதுகாப்பிற்காகவும், மருத்துவத் தேவைகளுக்காகவும் பெரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

Category: வளைகுட செய்தி

0 comments