சாலை விபத்து காப்பாற்றுவோரை பாதுகாக்க புதிய விதிமுறைகள்!
சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றுவோரைப் பாதுகாக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
“இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் தாக்கல் செய்யும் அறிக்கையும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சமுக தொண்டு நிறுவனங்களின் மனுக்களையும் ஆய்வு செய்த பின்னர் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், ரஞ்சன் கோகாய் தெரிவித்தனர்.
“சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தொண்டு நிறுவனம் மற்றும் எஸ். ராஜசேகரன் என்பவர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு நடத்த தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். அகர்வால் தலைமையில் குழு அமைத்தது.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, “சாலை விபத்தைக் நேரில் கண்ட முதல் சாட்சியின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று மனுதாரர்கள் சார்பில் கூறுவது சாத்தியமற்றது. சாலை விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றார்.
Category: மாநில செய்தி


0 comments