உலகின் இளம் அறிவாளி பெண் நைஜீரிய முஸ்லிம் சிறுமி!
ஸஹீலாவின் சாதனைப் பட்டியல் நீளமானது. ஹாவர்ட் பல்கலைக்கழக த்தில் மிக குறைந்த வயதில் இணைந்த மாணவி என்ற சிறப்பினைப் பெறுகின்றாள்
. இது மட்டுமல்ல,இவளின் திறமையை கண்டு வியந்து அமெரிக்கவில் உள்ள MIT, University of Pennsylvania, Cornell, Brown, Princeton, Columbia, University of Chicago உட்பட 12 பல்கலைகளகங்கள்இவளை தங்களது பல்கலைகளகங்களில் இணைத்து கொள்ள தானாக முன் வந்தது
. இறுதியாக, தனது ஏழு வயது தம்பியின் விருப்பத்திற்கு இணங்க ஹாவர்ட் பல்கலைக் கழகத்தைத் தெரிவுசெய்துள்ளாள்.இந்த சிறுமி.. அவளின் தம்பியும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் செல்லும் ஆவலில் இருக்கின்றான்.
“நீங்கள் செய்யும் விசயம் குறித்த தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் “நீங்கள் நினைத்த்தை சாதித்து கொள்ளலாம் என்னிடம் அந்த தன்னம்பிக்கையும் இறையருளும் இருப்பதால் என்னால் சாதிக்க முடிகிறது, நான் பல விசயங்களில் ஆர்வமாயுள்ளேன். குறிப்பாக கணிதத்திலும் விஞ்ஞானத்திலும்” எனக் கூறும் மாணவி ஸஹீலா, யொருபா, அரபு, ஸ்பைன், இலத்தின், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவளாக திகழ்கிறாள்
தனது வெற்றியின் படிகளாக அமைந்த பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவு கூறும் ஸஹீலா, “நான் என்னால் இயன்ற மிகச் சிறந்ததை செய்ய முயற்சிக்கின்றேன். ஊக்குவித்தல் கிடைக்கும் என்றால் எவரும் அற்புதமான காரியங்களைச் செய்யலாம்” எனக் கூறுகின்றாள்.
Thanks:fb
Category: உலக செய்தி

0 comments