.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அருகே பஸ் பாஸ் வழங்ககோரி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் சாலை மறியல் !!

Unknown | 8:26 PM | 0 comments



பெரம்பலூர், அக்.25-

பெரம்பலூர் அருகே அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் பஸ்பாஸ் வழங்ககோரி கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பெரம்பலூர் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு அரசு இலவச பஸ்பாஸ் வழங்க கோரியும், புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தை கட்டணம் இன்றி உடனே திறந்துவிடக் கோரியும் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு 9 மணி அளவில் பெரம்பலூர்- செட்டிக்குளம் பிரதான சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து சுமார் 20 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகாசினி, பெரம்பலூர் தாசில்தார் ரெங்கராஜ், பெரம்பலூர் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவசுப்ர மணியன், அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவ-மாணவிகள் தங்க ளுக்கு அரசு பஸ்பாஸ் வழங்கப் படாததால், தினமும் ரூ.20 முதல் ரூ.40 வரை செலவழித்து பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கிறோம்.

புதிய விடுதி

ஏழை,எளிய மாணவ- மாணவிகள் பஸ் கட்டணத்தை செலவிட முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்று கூறியும், பாலிடெக்னிக் அருகே கட்டப்பட்டுள்ள புதிய விடுதி கட்டிடத்தை காலதாமதம் இன்றி உடனே திறந்துவிடக் கோரியும், கல்லூரி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். மாலையில் கல்லூரி விடும் நேரத்தில் அரசு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்றுவலியுறுத்தினர். மாணவ- மாணவிகளுக்கு அரசு பஸ்பாஸ் இன்னும் ஓரிரு தினத்தில் வழங்குவதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததால் மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து மீண்டும் கல்லூரிக்கு சென்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1