பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் !!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில் 6 குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக வெண்பாவூர் வி.ஏ.ஓ. அமிர்தலிங்கம் மூலம் கலெக்டர் தரேஸ் அகமதுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் ஆர்.ஐ. மாயகிருஷ்ணன் விஏஓ அமிர்தலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிச்சை எடுத்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் கிழக்கு ராஜா பாளையத்தை சேர்ந்த அருணாச்சலம் மலர் தம்பதியினரின் மகன்கள் ஆறுமுகம் (17) இளையராஜா (12) சேராக்குளத்தான்(4) மகள்கள் ராஜேஸ்வரி (8) பூவாயி(3) மற்றும் அருணாசலத்தின் தங்கை மகன் அம்மாசி (12) ஆகிய 6 பேர் எனவும் அவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள். இதையடுத்து 6 குழந்தைகளும் மீட்கப்பட்டு பெரம்பலுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் கலெக்டர் தரேஸ் அகமது உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ சுப்ரமணியன் தாசில்தார் திருஞானம் ஆகியோர் முன்னிலையில் மீட்கப்பட்டு 6 குழந்தைகளும் பெரம்பலுர் குழந்தை நலக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து குழந்தை நலக்குழுவினர் மூலமாக வெண்பாவூரில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் கல்வி பயில 6 குழந்தைகளும் சேர்க்கப்பட்டனர். OUR COLLECTOR IS THE BEST

Category: மாவட்ட செய்தி

0 comments