.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வெளிநாட்டு இந்தியர்கள் தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் முன்னிலையா? பின்னடைவா?

Unknown | 9:32 PM | 0 comments

ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு குறையும்போது வெளி நாடுகளில் வசிக்கும் சம்பந்தப்பட்ட நாட்டினர் தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்புவர்.அதிக ஆதாயம் கருதி இத்தகைய வழிமுறை பின்பற்றப் படுகிறது. ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு குறைவாகவே பணம் அனுப்பியுள்ளதாக கருதலாம்.
அதே சமயம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் குவிந்த அன்னிய நேரடி முதலீட்டை (2,278 கோடி டாலர்) விடவும் கூடுதலாகும். இருந்த போதிலும் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் மற்ற நாட்டினரை விட வெளிநாடு வாழ் இந்தியர்களே நடப்பாண்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
5 - vanikam NRI.
உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர். இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இது குறித்து இவ் வங்கியின் இடம்பெயர்ந்தோர் மற்றும் மேம்பாட்டு இதழ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:’வெளிநாடுகளில் வசிப்போர் தங்கள் நாட்டிற்கு அதிக பணம் அனுப்பும் பட்டியலில் நடப்பாண்டும் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்.அதாவது நடப்பாண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 7,100 கோடி டாலரை இந்தியாவிற்கு அனுப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்ற 2012ம் ஆண்டு 7,000 கோடி டாலராக இருந்தது.
இந்த பட்டியலில் வெளிநாடு வாழ் சீனர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு 6,600 கோடி டாலரை அனுப்பி இரண்டாவது இடத்தை பிடிப்பர்.அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ் (2,400 கோடி டாலர்) மெக்சிகோ (2,400 கோடி), நைஜீரியா (2,100 கோடி டாலர்) இடம்பெறும்.
நடப்பாண்டு, இந்திய தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்கள் ஈட்டும் ஏற்றுமதி வருவாயை விட வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணம் அதிகமாக இருக்கும்.இதற்கிடையே கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 3,560 கோடி டாலரை தாயகத்திற்கு அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு குறையும்போது, வெளி நாடுகளில் வசிக்கும் சம்பந்தப்பட்ட நாட்டினர், தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்புவர்.அதிக ஆதாயம் கருதி இத்தகைய வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு குறைவாகவே பணம் அனுப்பியுள்ளதாக கருதலாம்” என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1