.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை தீர்வு கண்ட கலெக்டருக்கு பாராட்டு!

Unknown | 12:12 AM | 0 comments





பெரம்பலூர்,அக்,11:
 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பட்ட தாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் பெரு மளவு காலி யாக இருந்துவந்தது. இதுகுறித்து கடந்த செப்டம்பர்மாதம் நடந்த தலைமைஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் தரேஸ்அஹமதுவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பணியிடங்களை பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் மூலம், தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று மாநில பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் சபீதாவிடம் தொலை பேசியில் கலெக்டர் கேட்டுக் கொண் டார். பிறகு அவரிடமும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோரிடம் நேரிலும் வலியுறுத்தினார்.
இதையடுத்து ஆங்கில பாடத்திற்கு 30பேரும், கணிதம், அறிவியல் பாடங்களில் தலா ஒருவருக்கும் என 32பட்டதாரி ஆசிரியர் களையும், மற்றும் 12 முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 44 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வழங்கப்படும் ஊதியத்தைக்கொண்டு, நியமித்துக் கொள்ள பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிரத்தியேக அனுமதிஅளிக்கப்பட்டது. தற்போது மாநில அளவில் தொகுப்பூதிய ஆசிரியர் களை நியமித்துக்கொள்ள தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு எடுத்த முயற்சியால் மாநிலஅளவில் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதற்கு கல்வித்துறை சார்பில் கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்
.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1