.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூரில் நடைபெற்ற வாலி பால் போட்டி: முதல் பரிசுலப்பைக்குடிகாடு எம்.ஆர்.எப் அணி.இரண்டாம் பரிசு வென்றது வி.களத்தூர் அணி!

Unknown | 10:35 PM | 0 comments

வி.களத்தூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வி.களத்தூர் திப்புசுல்தான் வாரியர்ஸ் அணியால் மாபெரும்  வாலிபால் போட்டி சந்தை திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு இறந்தது. இப்போட்டி 16.10.2013 இன்று மாலை 4 மணியளவில் துவங்கியது. போட்டியை வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் T.S.E.லியாகத்அலி அவர்கள் துவக்கி வைத்தார். இப்போட்டிக்கான முதல் பரிசு ருபாய் 3001 புஷ்ரா நல அறகட்டளை வழங்குகிறது இரண்டாம் பரிசு ரூபாய் 2001 சுஹித் மெடிகல்ஸ் & ss பர்னிச்சர் வழங்குகிறது மூன்றாம் பரிசு ரூபாய் 1001 ஜாஸிம் எலெக்ட்ரிகல்ஸ் வழங்குகிறது.போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் வி.களத்தூர் திப்புசுல்தான் அணியும் லப்பைகுடிகாடு MRF அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். மூன்றாம் பரிசுக்கான போட்டியில்  வி.களத்தூர் திப்புசுல்தான்B அணியும் வி.களத்தூர் 7ஸ்டார் அணியும் மோதின இப்போட்டியில் 7ஸ்டார் அணி அபாரமான முறையில் வெற்றி கண்டு மூன்றாம் பரிசை தட்டி சென்றது. பிறகு நடைபெற்ற இறுதிபோட்டியில் வி.களத்தூர் திப்புசுல்தான் அணியும் லப்பைகுடிகாடு MRF அணியும் மோதின இரு அணிகளுக்கும் கடைசி வரை கடுமையான போட்டி நிலவியது. வெற்றி பரிசை வெள்ளபோகும் அணி யார் என்ற பரபரப்பு கூடி இருந்த ரசிகர்கள் இடையே காணப்பட்ட நிலையில் இறுதி கட்டத்தில்  அபாரமாக விளையாடி லப்பைகுடிகாடு MRF அணி முதல் பரிசை தட்டிசென்றது. வி.களத்தூர் திப்புசுல்தான் அணி இரண்டாம் பரிசை தட்டிசென்றது. பெயிண்டர் அஜிஜூர் ரஹ்மான், J.முஹமது அலி, A.அப்துஸ்ஸலாம் ஆகியோர் நடுவராக பணியாற்றினார்.















இப்போட்டிக்கான முதல் பரிசு ருபாய் 3001 புஷ்ரா நல அறகட்டளை வழங்கிய பொது எடுக்கப்பட்ட புகைப்படம்!



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1