பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி பெற அழைப்பு
பெரம்பலூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., தோல்வியடைந்தவர்கள் முதல், பட்டதாரிகள் வரை, கல்வி பயின்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதியை பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவடைந்தவராக இருக்கவேண்டும். அதாவது, 30.9.2008 அன்றோ, அதற்கு முன்னரோ பதிவு செய்தவராக இருக்கவேண்டும்.
மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது. தொடர்ந்து புதுப்பித்திருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., இனத்தவர், 30.09.2013 தேதியில், 45 வயதுக்குள்ளும், மற்ற வகுப்பினர் அதே போன்று, 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது, ஆயினும் தொலைத்தூர கல்வி பயில்பவராக இருக்கலாம். தகுதியுடையவர்கள் பள்ளி கல்வி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன், பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவம்பர், 30ம் தேதிக்குள் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் இந்த ஆண்டுக்கு சமர்ப்பிக்கவேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை வரும் நவம்பர், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி

0 comments