.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கடும் நிதிநெருக்கடியில் அமெரிக்கா; 7,83,000 பேர் வேலை இழப்பு!

Unknown | 9:04 PM | 0 comments

அமெரிக்காவில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்த சூழலில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா முதல் அனைத்து நாடுகளிலும் பொருளாதார நிலையை ஆட்டம் காண செய்யும் என்ற அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
ஒபாமா அரசு 2வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு பாராளுமறத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதிச்செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுகாதார திட்டத்திற்கு நிதி செலவினம் அதிகம் ஒபாமா அரசு ஒதுக்கியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒபாமா நிர்வாகம் அரசு நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள். இந்த மாதத்தின் சம்பளத்தை மட்டும் தந்து விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1