அடுத்த 4 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்- மத்திய அரசு முடிவு!
October 7, 2013
மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்கள் வழங்க முடிவு செய்துள்ளது.
மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில், அதே சமயம் தரமான செல்போன்கள் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு செல்போன்கள் வழங்குவதன் மூலம் சமுதாய பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.4,850 கோடி செலவாகும் என்றும், இந்த நிதியை ‘யூனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்டு’ (யு.எஸ்.ஓ.எப்) வழங்கும். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு விவசாயம், சுகாதாரம், கல்வி, நிதி சேவை, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அளிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இது கிராமப்புற தொலைபேசி சேவைகளை அதிகரிப்பதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் தாக்கம் தெரியும். பொருளாதார, சமுதாய சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களது வறுமை நிலையும் படிப்படியாக மறையும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த செல்போன்கள் வழங்கப்படும். முதல் ஆண்டில் 25 லட்சம் பயனாளிகளுக்கும், 2-வது ஆண்டில் 50 லட்சம் பயனாளிகளுக்கும், 3-வது ஆண்டில் 75 லட்சம் பேருக்கும், 4-வது ஆண்டில் ஒரு கோடி பேருக்கும் வழங்கப்படும். இந்த செல்போனில் எஸ்.எம்.எஸ்., குரல் தகவல் ஆகிய வசதிகள் இருக்கும்.
இந்த பயனாளிகளை மாநில அரசுகள் தான் தேர்வு செய்யும். வீட்டுக்கு ஒருவருக்கு தான் இவை வழங்கப்படும்.பெண்களுக்கு குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு தான் இந்த செல்போன்கள் வழங்கப்பட இருக்கிறது. செல்போன்கள் வழங்கப்பட்ட பிறகு மாதந்தோறும் ரூ.30-க்கு ரீசார்ஜ் வீதம் 2 வருடங்களுக்கு இந்த சேவை இருக்கும். இந்த திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல்படுத்தும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கிராமப்புறங்களில் 2017-ம் ஆண்டில் 70 சதவீதம் தொலைபேசி வசதியும், 2020-ம் ஆண்டில் 100 சதவீதம் எனவும் உயர்த்துவது தான் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Category: மாநில செய்தி

0 comments