2014 ஜூலை முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும்!
மெட்ரோ ரயில் சோதனையோட்டம் தொடங்க உள்ள நிலையில்,
அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் இரு வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும் என்று தெரிய வருகிறது.
சென்னையில் நெருக்கடி அதிகமாகி வருவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், சோதனை ஓட்டத்துக்கு ரயில் பாதைகளும் ரயில்களும் தயார் நிலையில் உள்ளன. அதிகாரிகள் பயிற்சி முடிந்து திரும்பிய உடன், அதிகாரிகள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்குவார்கள் என்று தெரிய வருகிறது.
மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் 67 பேர் பயிற்சிக்கு என்று டெல்லி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.இரு வழித் தடங்களில் மொத்தம் 8 மெட்ரோ ரயில்கள் இயங்க உள்ளன. டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் தொடங்க உள்ள நிலையில், அடுத்த வருடம் ஜூலை மாதம் 8 மெட்ரோ ரயில்களும் இயங்கும் என்றும் தெரிய வருகிறது.

Category: மாநில செய்தி

0 comments