2014–ம் ஆண்டில் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டை!
இந்திய ஒருங்கிணைந்த அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நீல்கேனி பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது "இந்தியாவில் இதுவரை 47 கோடி பேர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 2014–ம் ஆண்டில் 60 கோடி பேர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை வழங்குவதில் அனைத்துவிதமான பாதுகாப்பு அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் ஒரு முன்னோடி திட்டமாகும். நல்லமுறையில் அரசு திட்டங்களுக்கு செலவிட இது உதவும். அடுத்து அமைகின்ற அரசு உண்மையிலேயே நாட்டின் முன்னேற்றம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க உறுதியுடன் இருந்தால் கண்டிப்பாக அந்த அரசு இந்த ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்." என்றார்.
Category: மாநில செய்தி


0 comments