.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

2011-12ம் ஆண்டில் தகவல் உரிமை சட்டத்தில் 40 லட்சம் பேருக்கு தகவல்!!

Unknown | 9:26 PM | 0 comments

மும்பை: நாடு முழுவதும் கடந்த 201112ம் ஆண்டில் சுமார் 40 லட்சம் பேர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை(ஆர்டிஐ) பயன்படுத்தியுள்ளனர். அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து எந்த ஒரு தகவலையும் எந்த ஒரு குடிமகனும் கேட்டு பெற முடியும்.

எனினும், ராணுவம், உளவுத்துறை, சிபிஐ என ஒருசில துறைகளுக்கு மட்டும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என அண்மையில் தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்டிஐ சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. தற்போது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சட்டத்தை எத்தனை பேர் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை காமன்வெல்த் மனித உரிமை முயற்சி என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது.

கடந்த 201112ம் ஆண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இந்த சட்டத்தை பயன்படுத்தியிருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல்அறியும் உரிமை சட்டத்தை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இதனை மனித உரிமை முயற்சிஅமைப்பு மறுத்துள்ளது. 10 சதவீதத்துக்கும் குறைவான கோரிக்கைகளே நிராகரிக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1