.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் புதிதாக அமையவுள்ள பால்பண்ணை மூலம் 1 லட்சம் லிட்டர் பாலில் இருந்து வெண்ணெய், நெய் தயாரிக்க திட்டம் !

Unknown | 8:00 PM | 0 comments




பெரம்பலூர், அக்.19-

பெரம்பலூர் பகுதியில் புதிய பால்பண்னை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்வது குறித்து மேலாண்மை இயக்குனர் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்) மற்றும் பால் வளத்துறை ஆணையர் சுனில் பாலிவால் பார்வையிட்டார்.

பார்வையிட்டார்

பெரம்பலூர் பகுதியில் புதிய பால்பண்ணை அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி அதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து மேலாண்மை இயக்குனர் (தமிழ்நாடு கூட்டு றவு பால்உற்பத்தியாளர்கள் இணையம்) மற்றும் பால்வளத் துறை ஆணையர் சுனில் பாலிவால், கலெக்டர் தரேஸ் அகமதுவுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

செங்குணம், தந்தை ரோவர் கல்லூரி பின்புறம் அமைந் துள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்திற்கு அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களை சுனில் பாலிவால் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள பால்பண்ணைக்கு தேவைப் படும் குடிநீர் திட்டம் குறித்து ஆலம்பாடியில் உள்ள நீர் ஏற்று நிலையத்தை பார்வை யிட்டு அங்கிருந்து நீரினை பால்பண்ணைக்கு பயன்படுத் துவது குறித்து அலுவலர்களு டன் ஆலோசனை செய்தார்.

ஆலோசனை கூட்டம்

துறைமங்கலத்தில் அமைந் துள்ள பால் குளிர் நிலையத்தை யும் அவர்பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலகத் தில் பால்வளத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களு டன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பால்வளத்துறை இயக்குனர் சுனில் பாலிவால் கூறிய தாவது:-

புதிதாக அமையவுள்ள பால் பண்ணையின் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு அன்றாட உபயோகத் திற்கு பயன்படுத்துவது என் றும், மீதமுள்ள 1 லட்சம் லிட்டர் பாலிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களான வெண்ணைய், நெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த பால்பண்ணை அமைக்கப்படுவதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1