பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 19 ம் தேதி மாதாந்திர விளையாட்டு போட்டி கலெக்டர் தகவல்!
பெரம்பலூர்,அக்,12:
மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், வருகிற 19ந் தேதி பெரம்பலு�ரில் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :2013&14ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 19 ந் தேதி காலை 8மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப் போட்டிகள் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் நடைபெற உள்ளது. வயது வரம்பு கிடையாது. ஆண்களுக்கு 100மீ, 800மீ, 5000 மீ ஓட்டப் பந்தயங்களும், 110மீ தடை தாண்டுதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு 100மீ, 400மீ, 3000 மீ ஓட்டப் பந்தயங்களும், 100மீ தடைதாண்டுதல ஆகியப் போட்டிகளும், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டுஎறிதல், குண்டுஎறிதல், ஈட்டிஎறிதல், கையுந்துபந்து (வாலிபால்) ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெறவுள்ளது.
தகுதியுடைய அனைவரும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பெறக் கூடிய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments