.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நமது ஊரில் இனி மின்வெட்டு ஏற்பட்டால் 155333 க்கு போன் செய்யவும் !

Unknown | 8:00 PM | 0 comments

மின்சார வாரியத்திடமிருந்தே …நாம பணம் வாங்கறோம்! இன்று மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை.மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன். 155333 டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது. நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம். இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும் http://youtu.be/7TByE86yrt8

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1