பெரம்பலூர் மாவட்டத்தில் 124 பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவைப் பணிகள் ஆய்வு!
பெரம்பலூர் மாவட்டத்தில் 124 பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கப் பணிகள் அண்மையில் தொடங்கின.
பெரம்பலூர் மாவட்டத்தில் 87 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, 37 நடுநிலைப் பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுப் பணியை, மாவட்ட கல்வி அலுவலர் எல். வெங்கடாஜலபதி பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் தொடக்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து, மாவட்ட கன்வீனர் வி. ராதாகிருஷ்ணன், கெüரவ ஆலோசகர் எஸ். பாலச்சந்திரன், இணை கன்வீனர்கள் சாதிக்பாட்சா, டி. மாயகிருஷ்ணன், ஆர். ராஜமாணிக்கம், எம். தன்ராஜ், வி. ராஜா, எம். நவிராஜ், எம். கார்த்திகேயன், கே. பெருமாள், ஆர். செல்வகுமார் ஆகியோர் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, சுகாதாரம் பராமரித்தல், தேசிய நலனின் அக்கறை கொள்ளுதல், சக மாணவர்கள்- பொதுமக்களிடையே நட்புறவு, உதவுதல் மற்றும் கொடியேற்றும் முறை, இறைவணக்கப் பாடல், உறுதிமொழியேற்றல், வரவேற்பு நிகழ்வு, நன்றியுணர்வு, பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நவ. 27-ம் தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் செஞ்சிலுவை சங்க மாத நாள்காட்டி கல்வி அலுலர்களால் வெளியிடப்பட உள்ளது.
Category: மாவட்ட செய்தி


0 comments