.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அண்ணாவின் 105-வது பிறந்தநாள் விழாவையொட்டி கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெற்ற வென்ற வி.களத்தூர் மாணவிகளுக்குப் 10,000 பரிசளிப்பு!

Unknown | 9:30 PM | 0 comments


கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், அண்ணாவின் 105-வது பிறந்தநாள் விழாவையொட்டி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
வென்றோருக்கு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஜி. மாரிக்கண்ணன் தலைமை வகித்தார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், சி. காட்டுராசா, அன்பழகன், ரசூல் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பரிசு, சான்றிதழ்களை வழங்கி மாநில இளைஞரணி துணைச் செயலர் சுபா. சந்திரசேகர் பேசியது:
திராவிட இயக்கங்களின் வரலாறை மாணவ, மாணவிகள் அறிந்துகொள்வது அவசியமாகும். இதனால், தமிழை, தமிழினத்தைக் காப்பதற்காக திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்களை அறிந்துகொள்ள முடியும். இதனால் இளம் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள முடியும். இந்தப் போட்டிகள் மூலம் சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டும் பணியை திமுக இளைஞரணி செய்து வருகிறது என்றார் அவர்.
போட்டிகளில் முதலிடம் பெற்ற ராகவி, யாஷினி,வி.களத்தூர் நஜ்முனிஷா ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம், 2-ம் இடம் பெற்ற ரம்யாதேவி, வான்மதி, பெமினா ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 3-ம் இடம் பெற்ற சுதர்ஷினி, ரெனாஷ் பானு, வி.களத்தூர் சபின்தாஜ் ஆகியோருக்கு தலா ரூ. 2,500 ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1