.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் புறநகர் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

Unknown | 10:09 PM | 0 comments

பெரம்பலூர் புறநகர் பகுதியான வடக்குமாதவி சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் மலைப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியில் கூண்டு வைத்து ஒரு ஆண் சிறுத்தையை வனத்துறையினர் கடந்த 9ம் தேதி பிடித்து, அதனை சத்தியமங்கலம் காப்புக்காட்டில் விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் கவுல்பாளையம் மற்றும் பெரம்பலூர் புறநகர் பகுதியான வடக்குமாதவி சாலைகளில் கடந்த 13ம் தேதி சிறுத்தைகளின் கால்தடம் பதிவாகி இருந்தது. இதை பார்வையிட்ட வனத்துறையினர், ஒரு சிறுத்தை மற்றும் இரண்டு குட்டிகளின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து, அவற்றைப் பிடிக்க கவுல்பாளையம் மலையில் வனத்துறை மூலம் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, வடக்குமாதவி சாலையில் உள்ள கணபதி நகரை சேர்ந்த கோபால் மகன் சிவசங்கர் (45), திங்கள்கிழமை அதிகாலை குறிஞ்சி நகர் பகுதியில் நடைப்பயிற்சிக்காக நடந்து சென்றபோது, 2 குட்டிகளுடன் சிறுத்தை சென்றதை பார்த்துள்ளார்.
இதுகுறித்து, சிவசங்கர் கூறியது:
நாள்தோறும் அதிகாலை 4.15 மணியளவில் கணபதி நகர் - வடக்குமாதவி புறவழிச்சாலை வரை வாக்கிங் செல்வது வழக்கம். திங்கள்கிழமை அதிகாலை குறிஞ்சி நகர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது, சிறுத்தை மற்றும் அதன் 2 குட்டிகளுடன் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அருகில் உள்ள வீட்டின் கதவுகளை திறக்கக்கோரி கூச்சலிட்டேன். கதவுகளை திறக்காததால், அங்குள்ள வீட்டின் மதில் சுவற்றின் மீது ஏறி குதித்து மறைந்துகொண்டேன் என்றார் அவர்.
தகவலறிந்த, பெரம்பலூர் வட்டாட்சியர் ரெங்கராஜ், வனச்சரக அலுவலர் ரவீந்திரன் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, சிறுத்தைகளின் கால்தடங்களை பதிவு செய்தனர்.
இதேபோல, பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1