பெரம்பலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்?இரவில் மக்கள் வெளியே வர தடை!
பெரம்பலூர், செப். 8:
பெரம்பலூர் அருகே கிராமத்தில் சிறுத்தை நடமாடுவதாக பீதி எழுந்துள்ளது.
பெரம்பலூர் அருகே அரியலூர்&பெரம்பலூர் சாலையில் கவுல்பாளை யம் கிராமம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சித்தள்ளி, மருவத்தூர், சிறுவாச்சூர், நாராணமங்கலம், பாடாலூர், குரும்பலூர், பூலாம்பாடி, வெண் பாவூர், வேப்பந்தட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 25ஆயிரம் ஹெக் டேர் பரபரப்பளவில் அரசு வன காப்பு காடுகள் உள்ளது. இங்கு நரி, மான், மயில், முயல், காட்டுப்பன்றி, குரங்கு உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. தற் போது கவுல்பாளையம் மலைபகுதி, வயல் பகுதிகளில் மர்ம விலங்குகளின் கால் தடம், அதன்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. அது சிறுத்தை நடமாட்டமாக இருக்க லாமோ என கிராமமக்கள் பீதிஅடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலைபகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த இதே பகுதியை சேர்ந்த செங்கோடனின் 2ஆடுகள், கந்தனின் 4 ஆடு கள், ரெங்கசாமி 2, முருகன் 2, முரளியின் ஒரு ஆடு மாய மானது. மலைபகுதி யில் அந்த ஆடுகளின் எலும்பு மற்றும் தலை பகு திகள் கிடக்கிறது. மர்ம வில ங்குகள் கால்நடைகளை வேட்டையாடி வருவதாக விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மகராஜன் என்பவரது வயல் பகுதியில் மர்மவிலங்கின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. அது சிறுத்தையின் த டம் போல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ள னர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலு வலர் வடிவேல், ரேஞ்சர் ரவீந்திரன், வனவர் வீராச் சாமி, வன காப்பாளர் திருநாஞானம், சந்திரசேகரன், கருப்பையன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மலைப்பகுதி, காட்டுப்பகு தியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் விலங்குகளின் தடங்கள், கழிவு களை சேகரித்து பொள்ளாச்சியில் வன உயிரியியல் காப்பகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பிஉள்ளனர். அதன் அறிக்கை வந்தபின்னர் அது எந்த விலங்கின் கால் தடம் என தெரியவரும்.
இதற்கிடையே மர்ம விலங்கை பிடிக்க அங் காங்கே காட்டுக்குள் கூண்டு வைப்பதற்காக நவீன கூண்டுகள் கொண்டு வர வன அலுவலர்கள் பொள்ளாச்சி விரைந்துள்ளனர். இதனால் கிராமமக்கள் வெளியே வரமுடியாமல் பீதியடைந்துள்ள னர். வனத்துறை சார்பில் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி

0 comments