.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முசாபர் நகர் கலவரத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு வேலை வழங்கியது.!

Unknown | 9:32 PM | 0 comments

லக்னோ, செப்.29:
முசாபர் நகர் கலவரத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு வேலை வழங்கியது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கவல் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி, ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 62 பேர் பலியாயினர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த 15ம் தேதி கவல் கிராமத்துக்கு சென்ற மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், �கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும்� என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர், லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;
முசாபர் நகர் கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். முதல்வர் அளித்த வாக்குறுதிப்படி, கலவரத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு, அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.
குரூப் �சி� பிரிவில் 7 பேருக்கும், குரூப் �டி� பிரிவில் 47 பேருக்கும் பல்வேறு துறைகளிலும் அரசு வேலை வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவர் 18 வயதுக்கு குறைவாக இருப்பதால், அவர் 18 வயது அடைந்ததும் வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1