.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

"விபத்தில் பாதிக்கப்பட்டோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்'

Unknown | 10:07 PM | 0 comments

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் அரசின் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினருக்கு, தமிழக அரசு விபத்து நிவாரணம் வழங்கி வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற, 1 முதல் 4 வரையிலான படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அக். 6ம் தேதிக்குள் விண்ணப்பிலாம். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1