.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மோடி வருகையையொட்டி திருச்சியில் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை மாநகர ஜமாஅத்துல் உலமா கடும் கண்டனம்!

Unknown | 10:35 PM | 0 comments


திருச்சி, செப்.22-
பாரதீய ஜனதா கட்சியின்பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிவரும்26-ம் தேதி திருச்சிவருகிறார். இவரது வருகையை யொட்டிகடந்த ஒரு வார காலமாகமுஸ்லிம்கள் மீது அடக்கு முறை ஏவப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில்முஸ்லிம் களை போல் தோற்றம்உள்ள யாராவது இருந்தால்கூட அவர்கள் கடுமையாக சோதிக்கப்படுகிறார்கள். மேடையை யும்அங்குள்ள பந்தல் உள்ளிட்டவைகளையும் முஸ்லிம் கள்யாராவது நின்று பார்த்தால்அவர்கள் காவல் துறையால் துன்புறுத்தப்பட்டு பொய் வழக்கு புனையப்பட்டு சிறைக்குஅனுப்பப்படுகிறார்கள்.


அண்மையில் இப்பகுதியில் நின்ற காயல்பட்டினம் முஸ்லிம்வாலிபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு திருட்டு வழக்குசுமத்தப்பட்டு சிறைக்குஅனுப்பப்பட்டுள்ளார்.தற்போது பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியைச் சுற்றி யுள்ள இடங்களில் வசிக்கும்முஸ்லிம்கள் கடுமையானதொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்கூட நடைபெறாதகொடுமை தமிழகத்தின்அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தாங்கள் அனுபவிப்பதாக இப்பகுதி மக்கள் மணிச்சுடர்செய்தியாளரிடம் தெரிவித்தார்கள். இக் கொடுமைகள் குறித்துதிருச்சி மாநகர ஜமா அத்துல்உலமா காவல் துறை உயர்அதிகாரிகளின் கவனத் துக்குகொண்டு சென்றுள் ளது.

இதுதொடர்பாக ஜமாஅத் துல் உலமா திருச்சி மாநகரச்செயலாளர் மவ்லானா டி.கே.முஹம்மது யூசுப் ஹஜ்ரத்,திருச்சி மாநகர காவல்ஆணையரிடம் அளித்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது-எதிர்வரும் 26-ம் தேதிதிருச்சி மாநகரத்தில் நரேந்திரமோடி கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் ஜி கார்னர்பகுதிக்கு அருகில் உள்ளசுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கக்கூடிய முஸ்லிம் குடும்பங்களை போலீசார் பல்வேறு தொந்தரவுகளுக்குஉள்ளாக்கி வருவதாகத் தெரிகிறது.அதேபோல் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை என்றபெயரில் முஸ்லிம்களை பல்வேறு விதமான இனனல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

முஸ்லிம் வீடுகளில்ஆண்கள் இல்லாத நேரங்களில்கூட பெண்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவுகளுக்கு உள்ளாக்குகின் றனர்.கடந்த காலங்களில் திருச்சி மாநகரில் ஜமாஅத் துல் உலமாசபை காவல் துறைக்குதேவையான ஒத்து ழைப்பு நல்லமுறையில் வழங்கி வந்துள்ளது.ஆனால், தற்போது நடைபெறும் நிகழ்வு கள் காவல் துறையோடுஉள்ள நல்லுறவை சீர்குலைக்கக்கூடியவகையில் உள்ளன. நாங்கள் எந்த சமயத்திலும் நாட்டின் அமைதிக்கு பங்கம்ஏற்படும் வகையில் நடந்துகொண்டதில்லை.

இனிவரும்காலங்களில் நடக்கப் போவதும் இல்லை. எந்த நேரத் திலும்காவல் துறைக்கு தேவையானஒத்துழைப்பை வழங்கவேதயாராக உள்ளோம். வதந்திகளை மையப்படுத்தி முஸ்லிம்களை துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது எங்களுக்கு மிகுந்தமன வேதனை அளிக்கக்கூடியசெயலாக உள்ளது.

ஜனநாயக நாட்டில் ஒருதலைவரின் வருகையை காரணமாக வைத்து மக்களைகுறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்த செயல்அல்ல.ஆகவே, காவல் துறையின்உயர் அதிகாரிகள் இதில்தலையிட்டு முஸ்லிம்கள்அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ உரிய நடவ டிக்கைஎடுக்குமாறு வேண்டு கிறோம். இவ்வாறு திருச்சி மாநகரஜமாஅத்துல் உலமா அளித் துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: மணிச்சுடர் -22.09.2013

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1