ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கிடுக்கிப்பிடி!!
சென்னை: பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2007ம் ஆண்டிலேயே, மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், நகரப் பகுதிகளில் உள்ள, பள்ளி மாணவர்களில் ஒரு சிலர், மொபைல் போனை கொண்டு வருகின்றனர். இதை முற்றிலும் தடுப்பதற்கு, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு பள்ளிகளில், இது போன்ற நிலை இல்லை என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, தற்போது, தொடக்க கல்வித்துறை, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. எனவே, மாணவ, மாணவியர், பள்ளிக்கு, மொபைல்போன் கொண்டு வராமல் இருக்க, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
Category: மாணவர் பகுதி


0 comments