.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தையை சத்தியமங்கலம் வனத்தில் விட ஏற்பாடு!

Unknown | 10:37 PM | 0 comments

பெரம்பலூர், செப். 11:
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் மலைகுன்றில் பிடிபட்ட ஆண்சிறுத்தை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு மினி லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தில் அடிக்கடி ஆடு, மாடுகள் காணமல் போ யின. அங்குள்ள மலைக்குன்றில் ஆடு, மாடு எலும்புகள், மயில் இறக்கைகள் கிடப்பதாக ஆடுமேய்க்கும் சிலர் கூறியதையடுத்து, மர்மவிலங்கு நடமாட்டம் பற்றி தெரியவந்தது. அருகிலுள்ள இடங்களில் மர்ம விலங்கின் காலடித்தடம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஊராட்சித்தலைவர் செல்வகுமார், வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்க முடிவானது. கடந்த 8ம்தேதி பொள்ளாச்சியிலுள்ள வன உயிரியல் காப்பகத்தில் இருந்து, சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளைப் பிடிக்க பயன்படுத்தப்படும் இரும்புக் கூண்டு வரவழைக்கப்பட்டது. கவுல்பாளையம் மலைமேல் வைக்கப்பட்டது. அதில் இரையாக ஒரு ஆட்டுக்குட்டி வைக்கப்பட்டது. அன்று இரவே அந்தக்கூண்டில் 3 வயதுடைய சிறுத்தை ஒன்று சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து வனவர் வீராசாமி, வனக்காப்பாளர்கள் கருப்பையன், திருஞானம், திருநாவுக்கரசு, ராமையா, ராஜேந்திரன் ஆகியோர் மலையிலேயே தங்கி விடியவிடிய சிறுத்தைக்கு காவலிருந்தனர். மேலும், சிறுத்தையை சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டுபோய் விடுவதற்காகவும், சிறுத்தையைப்பற்றி முழுமையாக அறிவதற்காகவும்பொள்ளாச்சியிலிருந்து வனஉயிரின மருத்துவரான டாக்டர் மனோகரன் வரவழைக்கப்பட்டார்.
நேற்று அவர், பிடிபட்ட சிறுத்தை ஆண்சிறுத்தை, அதன் வயது 3 இருக்கும் என உறுதிபடுத்தினார். பிறகு கலெக்டர் தரேஸ்அஹமது முன்னிலையில், டாக்டர் மனோகரன், கூண்டிலிருந்த சிறுத்தைக்கு மயக்கமருந்து, சத்துமருந்து ஆகியவற்றை அதன் உடலில், துப்பாக்கியில் பொருத்தப்பட்ட சிரிஞ்சு மூலம் சுட்டு செலுத்த ஏற்பாடு நடந்தது. பிறகு அந்தமுயற்சி கைவிடப்பட்டு, டாக்டர் மனோகரன் மருந்து ஏற்றப்பட்ட சிரிஞ்சியை பிளாஸ்டிக் பைப்பில் வைத்து, சிறுத்தை உடலில் பாய்ச்சினார்.
அந்த முறையில் செலுத்தப்பட்ட சிரிஞ்சு சரியாக சிறுத்தையின் உடலில் இறங்காததால் மருந்து உள்ளே செல்லவில்லை. பிறகு மயக்க மருந்து செலுத்தாமலேயே மினிலாரியில் கூண்டுடோடு ஏற்றி செல்ல முடிவு செய்து, பொக்லைன்மற்றும் மினி லாரி வரவழைக்கப்பட்டது. பொக் லைன் உதவியுடன் கூண் டினை ரோப் கம்பியால் கட்டி தூக்கி மினிலாரியில் ஏற்றி வைத்தனர். அங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்ட மினிலாரி, வனத்துறை கெஸ்ட்ஹவுசில் இருந்து மதியம் 2 மணிக்கு சத்தியமங்கலம் டிவிஷனுக்கு உட்பட்ட பவானி ரேஞ்சிலுள்ள தெங்குமரகடா என்ற வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த மினிலாரியில் டாக்டர் மனோகரன், வனக்காப்பாளர் ராமலிங்கம், வனக்காவலர் ராஜேந்திரன் மற்றும் 2 டிரைவர்களும் இருந்தனர்.
டாக்டர் மனோகரன் கூறுகையில், இரவு 7 மணியளவில் (நேற்று) குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்ற பிறகு, சிறுத்தையின் நெற்றி காயத்திற்கு சிகிச்சை அளித்தப்பிறகு, உணவு கொடுத்து, வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்தார். கவுல்பாளையம் மலைப்பகுதிகளில் மேலும் ஒரு சிறுத்தை இருக்கலாமென சந்தே கிக்கப்படுவதால், 10ம் தேதி இரவு சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிறுத்தையை இறக் கிவிட்ட பிறகு கொண்டு செல்லப்பட்ட அதே மினி லாரியில் அதே இரும்புக்கூண்டு, மீண்டும் கவுல்பாளையம் மலைப்பகுதிக்கு கொண்டு வரப்படும். முன்பு வைத்த இடத்திற்கு சற்று அருகில் ஆட்டுக்குட்டியுடன் மீண்டும் மற்றொரு சிறுத்தை யை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வடிவேலு கூறினார்.
மினி லாரியில் பயணம்
கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1