பெரம்பலூர் போலீஸ் நிலையம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம்!
பெரம்பலூர், செப்.26-
பெரம்பலூர் போலீஸ் நிலையம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டது.
புதிய போலீஸ் நிலைய கட்டிடம்
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் புதிய போலீஸ் நிலைய கட்டிடம் தற்போது கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் சரக (சர்க்கிள்) இன்ஸ்பெக்டர் பங்களா இருந்தது. அந்த பங்களாவில் பிறகு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகமும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையமும் இயங்கியது.
22 சென்ட் பரப்பளவில் அமைந்த பழைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பங்களா அகற்றப்பட்டு நான்கரை சென்ட் பரப்பளவில் நகர போலீஸ் நிலையத்திற்கு காவலர் வீட்டுவசதி வாரியம் மூலம் புதிய கட்டிடம் ரூ.45 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய போலீஸ்நிலைய கட்டிடம் முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக பெரம்பலூர் கடைவீதியில் இயங்கிவந்த போலீஸ் நிலையம் கடந்த ஒன்றரை ஆண்டாக தாலுகா அலுவலக வளாகத்தில் 110 ஆண்டுகள் பழமையான பொதுப் பணித் துறை கட்டிடத்தில் (பழைய ஜே.எம். கோர்ட்டு ) தற்காலிக மாக இயங்கி வந்தது.
தற்போது போலீஸ் நிலையம் புதிய கட்டிடத்திற்கு இட மாற்றம் செய்யப் பட்ட பிறகு, பழைய மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கட்டிடத்தில் வட்ட வழங்கல் அலுவலகமும், நலிந்தோர் நல தாசில்தார் அலுவலகமும் இயங்கி வருகிறது.
கூடுதல் போலீசார் தேவை
பெரம்பலூரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்றாற் போல போலீஸ் எண்ணிக்கை இல்லை. பிரிட்டிஷ் காலத்தில் நியமிக்கப்பட்ட போலீஸ் எண்ணிக்கைதான தற்போதும் இருந்துவருகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இருந்த பெரம்பலூர் நகரம், தற்போது ஏறத்தாழ 5 மடங்கு விரிவடைந்து விட்டது.
அதுபோல திருட்டுகள், விபத்துகள் பெருகி வருவதா லும், பெரம்பலூர் நகரில் தாலுகா போலீஸ்நிலையத்தை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தினால், குற்றஎண்ணிக்கையை பெரிதும் குறையும் நிலை உருவாகும் என்று பெரம்பலூர் பொதுமக்கள் தெரிவித் தனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments